லக்னோ, ஜன. 1 உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிறிஸ்தவக் கோயிலின் முன்பு, ஹிந்து ரக்ஷா தள் என்ற அமைப்பினர் மேடை போட்டு, வாள், கத்தி, ஈட்டி, திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்வைக்கு வைத்து, ‘‘இனிமேல் எங்கள் கைகள் பதில் கூறாது!’’ என்றனர். இவ்வமைப்பின் தலை வராக தன்னைக் கூறிக்கொள்ளும் அன்னும் சவுத்திரி என்பவர், ‘‘பாரதத்தில் இருந்தால், ‘ஜெய் சிறீராம்’ மட்டுமே! இல்லை என்றால், ஹிந்துக்கள் இதைத்தான் கையில் எடுப்பார்கள், அதற்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது’’ என்றார்.
‘‘பங்களாதேசில் ஹிந்துக்கள் கொல்லப்பட்ட போது, கிறிஸ்த வர்களும் தான் வேடிக்கை பார்த்த னர். ஆகவே, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் முடிவு எங்கள் கைகளில்தான்’’ என்று மிரட்டல் விடுத்து, வாளால் வெட்டுவதுபோல் சைகை செய்து மிரட்டினார்கள்.
ஹிந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறோம் என்று சொல்லுகி றார்களே, அதற்கு அர்த்தம் இது தான். இவ்வளவுப் பச்சையாகக் கொடூரமான ஆயுதங்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறார்கள் – இது எங்கே போய் முடியும்?
இது நாடா? கொடும்புலிகள் வாழும் காடா? என்று கேட்க வேண்டாமா?
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் பி.ஜே.பி. வந்தாலும், வந்தாது; அதிகார பலம், பண பலம், ஆள் பலம் என்று திரட்டி, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், தயக்கம் இல்லாமல் வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்ள மக்களைத் தூண்டுகிறார்கள் என்றால், இது எங்கே போய் முடியும்?
அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்றால், அதை நியாயப்படுத்த முடியாது – கண்டிக்கப்பட வேண்டியதே! வன்முறை வெறியாட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது!
அதேநேரத்தில், இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்பது கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டியதே!
நாடு எங்கே போகிறது? ‘‘கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் முடிவு எங்கள் கைகளில்தான்!’’ ஹிந்து ரக்ஷாதள் என்ற ஹிந்துத்துவ அமைப்பினர் மிரட்டல்
Leave a Comment
