வழக்குரைஞர் மூ.அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
- நேற்றையத் (31.12.2025) தொடர்ச்சி…
- சன்னியாச யோகம்
- அத்தியாயம் 5 – ஸ்லோகம் 18
- ப்ரஹ்ம யோகம்
- அத்தியாயம் 8 – ஸ்லோகம் 13
- ஸ்லோகம் 15
- ஸ்லோகம் 17
- ஸ்லோகம் 24
- ஸ்லோகம் 25
- ஸ்லோகம் 26
- ராஜ ரகசிய யோகம்
- அத்தியாயம் 9 – ஸ்லோகம் 17
- ஸ்லோகம் 20
- ஸ்லோகம் 29
- ஸ்லோகம் 32
- விபூதி யோகம்
- அத்தியாயம் 10 – ஸ்லோகம் 21
- மூன்று வகை குணங்கள்
- அத்தியாயம் 14 – ஸ்லோகம் 14
- ஸ்லோகம் 15
- தேவ அசுர குணங்கள்
- அத்தியாயம் 16 – ஸ்லோகம் 19
- மூவகை நம்பிக்கை
- அத்தியாயம் 17 – ஸ்லோகம் 13
- ஸ்லோகம் 14
- ஸ்லோகம் 23
- ஸந்யாஸ யோகம்
- அத்தியாயம் 18 – ஸ்லோகம் 42
- ஸ்லோகம் 43
- ஸ்லோகம் 44
- ஸ்லோகம் 47
- ஸ்லோகம் 48
பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத் தந்துள்ள வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, ஜாதி – வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் பகவத் கீதை குறித்த அரியதொரு முன்னுரையைத் தந்துள்ளார். அதனை அப்படியே வாசகர்கள் படிக்கத் தருகிறோம்.
நேற்றையத் (31.12.2025) தொடர்ச்சி…
சன்னியாச யோகம்
அத்தியாயம் 5 – ஸ்லோகம் 18
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ॥
வித்3யாவினயஸம்பன்னே ப்3ராஹ்மணே க3வி ஹஸ்தினி |
ஸுனி சைவ ஸ்வபாகே ச பண்டி3தா: ஸமத3ர்ப்பின: ||
பொருள்: கல்வி, பெருந்தன்மை நிறைந்த பிராம ணர்கள், பசு, யானை, நாய், நாயைச் சாப்பிடுபவர்கள் (சண்டாளர்கள்) ஆகிய அனைவரையும் பண்டிதர் களாகக் சமமாகப் பார்க்கிறார்கள்.
பிராமணர்கள் உயர்ந்த குணமுடையவர்கள் என்பதை இந்தப் பாடல் புகழ்கிறது.
ப்ரஹ்ம யோகம்
அத்தியாயம் 8 – ஸ்லோகம் 13
ॐ इत्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥
ஓம் இத்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன்|
ய: ப்ரயாதி த்யஜந்தே3 ஹம் ஸ யாதி பரமாம் க3திம் |
பொருள்: யோக நிலையில் அமர்ந்து ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்து பரமாத்மாவை நினைத்து உடலை விட்டு உயிர் பிரிந்தால் அவர் நிச்சயம் பரமகதியடைவார்.
அறிவியலுக்குப் புறம்பான நிரூபணம் ஆகாத கருத்து.
ஸ்லோகம் 15
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥
மாமுபேத்ய புனர்ஜன்ம து3கா2லயமஸாஸ்வதம் |
நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3 தா: ||
பொருள்: பக்திமான்களான யோகிகள் என்னை அடைந்தவுடன் துன்பங்கள் நிறைந்த தற்காலிகமான இந்த உலகில் புனர் ஜென்மம் எடுப்பதில்லை. மகாத்மாக்களாகிய அவர்கள் பரம ஸித்தி பெற்றவர் களாகிறார்கள்.
இந்தப் பாடல் புனர் ஜென்மத்தைப்பற்றிச் சொல்கிறது. அறிவியலால் நிரூபணம் ஆகாத கருத்து.
ஸ்லோகம் 17
सहस्त्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥
ஸஹஸ்ரயுக3 பர்யந்தமஹர்யத்3ப்3ரஹ்மணோ விது3: |
ராத்ரிம் யுக3ஸஹஸ்ராந்தாம் தே(அ)ஹோராத்ரவிதோ3 ஜனா:||
பொருள்: மனித கணக்கின்படி ஒரு ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே போல் ஒரு இரவும் அதே காலத்தைக் கொண்டதாக இருக்கும்.
ஸ்லோகம் 24
अग्निज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥
அக்3னிர்ஜ்யோதிரஹ: ஸுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் |
தத்ர ப்ரயாதா க3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ப்ரஹ்மவிதோ3ஜனா: ||
பொருள்: உத்தராயணத்தில் சூரியன் கடந்து செல்லும் ஆறு மாதங்களில் சுக்ல பட்சத்தில் (வளர் பிறை) அக்னியின் பார்வையில் பகலில் உயிர் விடும் ஜனங்கள் பிரம்மத்தை அடைவார்கள்.
ஸ்லோகம் 25
धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी पाप्य निवर्तते ॥
தூ4மோ ராத்ரிஸ்ததா2 க்ருஷ்ண: ஷண்மாஸா
த3க்ஷிணாயனம் |
தத்ர சாந்த்3 ரமஸம் ஜ்யோதிர்யோகீ3 பாப்ய நிவர்ததே II
பொருள்: யோகி தக்ஷிணாயனத்தில் புகை மண்டலத்தில் கிருஷ்ண பட்சத்தில் (தேய் பிறையில்) சந்திரன் தெரியாத அமாவாசை நாளில் உயிர் விட்டால் மீண்டும் பிறப்பார்.
ஸ்லோகம் 26
शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ।॥
ஸுக்லக்ருஷ்ணே கீ3தி ஹ்யேதே ஜக3த ஸாஸ்வதே மதே |
ஏகயா யாத்யநாவ்ருத்திமன்யயாவர்ததே புன: ||
பொருள்: சாஸ்திரங்களின்படி இரண்டு வகைகளில் இந்த ஜகத்தை விட்டு ஒருவர் உயிர் பிரிகிறது. ஒன்று சுக்லத்தில் (வெளிச்சத்தில்); மற்றொன்று கிருஷ்ணத்தில் (இருட்டில்) ஆகும். வெளிச்சத்தில் உயிர் பிரியும் ஒருவர் மீண்டும் பிறப்பதில்லை. இருட்டில் உயிர் விடுபவர் மீண்டும் பிறக்கிறார்.
ஸ்லோகங்கள் 17, 24, 25, 26 ஆகியவற்றில் கூறப் பட்டுள்ள கருத்துகள் அறிவியலால் நிரூபணம் ஆகாத, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கருத்துகளாகக் கொள்ளலாம்.
ராஜ ரகசிய யோகம்
அத்தியாயம் 9 – ஸ்லோகம் 17
पितामहस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रम् ॐकार ऋक्साम यजुरेव च ॥
பிதாமஹஸ்ய ஜக3தோ மாதா தா4தா பிதாமஹ: |
வேத்3யம் பவித்ரம் ஓங்கார ரிக்ஸாம யஜுரேவ ச ||
பொருள்: நானே இந்த அண்டத்தின் தந்தை; நானே தாய்; நானே காவலன்; நானே பிதாமகன்; நானே அறிந்து கொள்ள வேண்டியவன்; நானே பவித்ரம்; நானே ஓம்கார மந்திரம்; நானே ரிக், ஸாம, யஜுர் வேதங்கள்.
இந்தப் பாடலில் முதல் மூன்று வேதங்களான ரிக், ஸாம, யஜுர் வேதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஆர்யர்களின் வேதங்கள்.
ஸ்லோகம் 20
त्रैविद्या मां सोमपाः पूतपापा
यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक
मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥
த்ரைவித்3யா மாம் ஸோமபா: பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க3திம் ப்ரார்த்த2யந்தே |
தே புண்யமாஸாத்3ய ஸுரேந்த்3ரலோக
மஸ்நந்தி தி3வ்யாந்தி்3வி தே3வபோ4கா3ன் ||
பொருள்: மூன்று வேதங்களைப் படித்து சோமபானத்தை அருந்தி சொர்க்க லோகத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் என்னை வேண்டுகிறார்கள். பாவங்கள் நீங்கி சுத்தமானவர்கள் புண்ணிய இந்திர லோகத்தில் பிறந்து தெய்வீக இன்பத்தைத் துய்க்கிறார்கள்.
சோம பானம் ஆரியர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.
ஸ்லோகம் 29
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भत्त्या मयि ते तेषु चाप्यहम् ॥
ஸமோ(அ)ஹம் ஸர்வபூ4தேஷு ந மே த்3 வேஷ்யோ
(அ)ஸ்தி ந ப்ரிய |
யே ப4ஜந்தி து மாம் ப4க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||
பொருள்: நான் எல்லா உயிரினங்களையும் சமமாகக் கருதுகிறேன் . யாரையும் வெறுப்பதில்லை. யாரையும் விரும்புதில்லை. ஆனால் யார் பக்தியுடன் எனக்குப் பணி செய்கிறார்களோ அவர் என் நண்பன். அவர் என்னுள் இருக்கிறார். நான் அவருக்கு நண்பனாக இருக்கிறேன்.
முதலில் எல்லாரையும் சமமாக நினைத்து, பின்னர் தொழுபவர்களுக்கு மட்டும் சலுகை என முன்னுக்குப் பின் முரணான கூற்று.
ஸ்லோகம் 32
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥
மாம் ஹி பார்த்த2 வ்யாபாஸ்ரித்ய யே(அ)பி ஸ்யு:
பாபயோனய:
ஸ்த்ரியோ வைய்யாஸ்ததா2 ஸூத்3ராஸ்தே(அ)பி யாந்தி
பராம் க3திம்
பொருள்: ஓ பார்த்தா! வைசிய, சூத்ர ஸ்த்ரீகளின் பாவ யோனியில் பிறந்தவர்களும் என்னிடம் அடைக்கலமானால் பரம பதத்தை அடைய முடியும்.
இதன் மூலம் பிராமணர், க்ஷத்ரியர்களைத் தவிர மற்ற இரண்டு வர்ண சாதிகளும் கீழ் சாதிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். வணிக மரபினரான செட்டியார்கள், பனியாக்கள் கூட கீழ் சாதியினராகவே கருதப்படுகிறார்கள்.
விபூதி யோகம்
அத்தியாயம் 10 – ஸ்லோகம் 21
आदित्यानामहं विष्णुर्थ्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥
ஆதி3த்யானாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமான் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸி ||
பொருள்: ஆதித்யர்க்ளில் நானே விஷ்ணு. ஒளிகளில் ஒளிரும் சூரியன். மாருதத்தில் நானே மாரீசி. நட்சத்திரங்களில் நானே சசி (சந்திரன்). சந்திரன் ஒரு துணைக் கோள் என்பதை வியாசர் காலத்தில் அறியாததால், நட்சத்திரங்கள் சூரியனை விடப் பெரியது என்று அறியாததால், நட்சத்திரங்களில் நான் சசி (சந்திரன்) என்று பகவான் சொல்கிறார்.
மூன்று வகை குணங்கள்
அத்தியாயம் 14 – ஸ்லோகம் 14
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥
யதா3 ஸத்த்வே ப்ரவ்ருத்3தே து ப்ரலயம் யாதி தே3ஹப்3ருத் I
ததோ3த்தமவிதா3ம் லோகானமலான்ப்ரதிபத்3யதே II
பொருள்: ஒருவன் ஸத்வ குணத்தில் இறக்கும் முனிவர்களுக்கான பொழுது சிறந்த லோகங்களை அடைவான். உயர்ந்த லோகங்களை அடைவான்.
ஸ்லோகம் 15
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥
ரஜஸி ப்ரலயம் க3த்வா கர்மஸங்கி3ஷு ஜாயதே I
ததா2 ப்ரலீநஸ்தமஸி மூட4 யோநிஷு ஜாயதே II
பொருள்: ஒருவன் ரஜோ குணத்தில் இறந்தால் கர்மப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களோடு பிறப்பான். தமஸ் குணத்தில் இறந்தால் மூட ( யோனிகளில்) கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
14, 15 பாடல்களில் சொன்ன கருத்துகள் அறிவியலால் நிரூபணமாகாத மூட நம்பிக்கைகளாகக் கருத இடமுண்டு.
தேவ அசுர குணங்கள்
அத்தியாயம் 16 – ஸ்லோகம் 19
तावई पिता क्रूरान्संसारेषु नराधमान् ।
विषाम्यजयमशुभानासुरीष्वेव योनिषु ॥
தானஹம் த்3விஷத க்ரூரான்ஸம்ஸாரேஷு நராத4மான் |
க்ஷி பாம்யஜஸ்ரமஸுபா4னாஸுரீஷ்வேவ யோனிஷு ||
பொருள்: எவர்கள் பொறாமையில் குரூர புத்தியில் மனிதர்களில் கீழ்நிலையில் இருக்கிறார்களோ, அவர்களைப் பிறவி எனும் பெருங்கடலில் நிரந்தரமாக அசுர யோனிகளில் விட்டு விடுகிறேன்.
கருணையுள்ள பகவான் செயலாக மேற்கண்ட செயல் தெரியவில்லை.
மூவகை நம்பிக்கை
அத்தியாயம் 17 – ஸ்லோகம் 13
विधिहीनमसृष्टानं मन्त्रहीनमदक्षिणम् ।
अजाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥
விதி4ஹீனமஸ்ருஷ்டான்னம் மந்த்ரஹீனமத3 க்ஷிணம் |
ஸ்ரத்3தா4விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ||
பொருள்: சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிக்காமல், பிரசாதத்தை விநியோகிக்காமல், வேத மந்திரங் களை உச்சரிக்காமல், புரோகிதர்களுக்குத் தட்சணை அளிக்காமல் செய்யப்படும் வேள்விகள் தாமஸ பண்பாளர்களால் செய்யப்படுவதாகக் கருதப்படுகிறது.
புரோகிதர்களுக்குத் தட்சணை கொடுப்பதை வலியுறுத்துகிறது மேற்கண்ட பாடல்.
ஸ்லோகம் 14
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ।।
தே3வத்3விஜகு3ருப்ராஜ்ஞபூஜனம் ஸௌசமார்ஜவம் |
ப்3ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே II
பொருள்: தேவர்கள், இரு பிறப்பாளர்களான பிராமணர்கள், குருக்கள், மாதா, பிதாக்கள் ஆகியோரை வணங்குவதில் எளிமை பிரம்மச்சர்யம், அஹிம்சை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில் சரீரத்தின் ஆசாரமான செயல்கள் அடங்குகின்றன.
பிராமணர்களின் மேன்மையை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.
ஸ்லோகம் 23
ॐ तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥
ஓம் தத்ஸதி3தி நிர்தே3ஸோ ப்3ரஹ்மணஸ்த்ரிவித4: ஸ்ம்ருத:I
ப்3ராஹ்மணாஸ்தேன வேதா3ஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா II
பொருள்: படைப்பின் ஆரம்பத்திலிருந்தே ஓம் தத், சத் ஆகிய மூன்று சொற்களும் பரம்பொருளைக் குறிக்கும் சொற்களாகும். அதனால் பிராமணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
இந்தப் பாடலும் பிராமணர்களின் உயர்வைக் குறிப்பிடுகிறது.
ஸந்யாஸ யோகம்
அத்தியாயம் 18 – ஸ்லோகம் 42
शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥
ஸமோ த3மஸ்தப: ஸெளசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச |
ஜ்ஞானம் விஜ்ஞானமாஸ்திக்யம் ப்3ரஹ்மகர்ம ஸ்வபா4 வஜம் ||
பொருள்: அமைதி, சுய கட்டுப்பாடு, தவம்,தூய்மை, சகிப்புத் தன்மை, நேர்மை, ஞானம், கல்வி, ஆஸ்திகம் ஆகியன பிராமணர்களின் இயல்பான குணங்கள் ஆகும்.
ஸ்லோகம் 43
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥
ஸௌர்யம் தேஜோ த்4ருதிர்தா3க்ஷயம் யுத்3தே4
சாப்யபலாயனம் |
தா3னமீஸ்வரபா4வஸ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் ||
பொருள்: வீரம், சக்தி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, தலைமைப் பண்பு ஆகியன க்ஷத்ரியர்களின் இயல்பான குணங்களாகும்.
ஸ்லோகம் 44
कृषिगोरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥
க்ருஷிகோ3ரக்ஷயவாணிஜ்யம் வைய்யகர்ம ஸ்வபா4வஜம் |
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்3ரஸ்யாபி ஸ்வபா4வஜம் ||
பொருள்: உழவு, பசுக்களைப் பாதுகாத்தல்,வாணிபம் ஆகியன வைசியர்களின் இயல்பான குணங்களாகும். உடலுழைப்பு, மற்றவர்களுக்குத் தொண்டு செய்தல் சூத்திரர்களின் இயல்பான குணங்களாகும்.
ஸ்லோகங்கள் 42, 43, 44 பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களின் இயல்பான குணங்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளன. தொழில்களில் வேறுபாடுகள் இருக்கலாம். தொழில்கள் செய்பவர்களுக்குக் குணங்கள் இயல்பாக அமைகின்றன என்பது ஏற்புடையதல்ல. வேறு எந்த நாட்டிலும் தொழிலை வைத்து ஒருவனுடைய குணத்தைத் தீர்மானிப்பதில்லை.
ஸ்லோகம் 47
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्विषम् ॥
ஸ்ரேயான்ஸ்வத4ர்மோ விகு3ண: பரத4ர்மாத்ஸ்வனுஷ்டி2தாத்|
ஸ்வபா4வநியதம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பி3ஷம் ||
பொருள்: ஒருவன் தனக்குரிய தர்மத்தைக் குறைவுடன் செய்வது, மற்றவர்களின் தர்மத்தை நிறைவாகச் செயவ்தைவிட மேலானது. தனக்குரிய தொழிலைச் செய்வதால் ஒருவன் பாவத்தின் விளைவுகளால் பாதிப்படைய மாட்டான்.
அதாவது அவனவன் குலத் தொழிலையே செய்ய வேண்டும். ஒரு பிராம்மணன் தன் தொழிலைக் குறையுடன் செய்யலாம். ஒரு வைசியன் பிராமணன் தொழிலைச் செய்யும் திறமை வாய்ந்தவனாக இருந்தாலும் செய்யக் கூடாது. ஒரு சூத்திரன் க்ஷத்திரியனைவிட வீரமாக இருந்தாலும் க்ஷத்திரியனின் வேலையைச் செய்யக் கூடாது.
ஸ்லோகம் 48
सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ3ஷமபி ந த்யஜேத் |
ஸர்வாரம்பா4 ஹி தோ3ஷேண தூ4மேநாக்3னிரிவாவ்ருதா: ||
பொருள்: ஓ குந்தி மைந்தனே! ஒவ்வொரு செயலுடனும் தோஷம் கூடவே இருக்கிறது. அதாவது நெருப்பைப் புகை மறைத்திருப்பதைப் போல, ஒவ்வொரு செயலிலும் குறை இருப்பது சகஜம். எனவே ஒருவன் தன் இயல்பான தொழிலைக் கைவிடக் கூடாது.
ஸ்லோகம் 48 ஒவ்வொருவனும் அவனவன் குலத் தொழிலையே வலியுறுத்துகிறது. செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
எனவே மேலே சொல்லப்பட்டுள்ள கருத்துகளின் படி, பகவத் கீதை ஆரியர்களின் கலாச்சாரத்தை, பிராமணர்களின் உயர்வை விளக்கி, வர்ணாஸ்ரம தர்மத்தைப் பாதுகாக்கவே எழுதப்பட்ட நூல் என்பது என் தாழ்மையான எண்ணம்.
எப்படிப் பார்த்தாலும் இந்துக்களின் அல்லது இந்தியர்களின் பொது நூலாக வைக்கும் தகுதி பகவத் கீதையைவிட, திருக்குறளுக்கே பொருந்தும் என்பது என் கருத்து.
பகவத் கீதையின் ஸமஸ்கிருதப் பாடல்களும் தமிழ் அர்த்தங்களும் என்ற நூலினை வாசகர்கள் படித்து அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு முடிவு எடுக்கலாம்.
– மூ.அ. கிருஷ்ணமூர்த்தி, நூலாசிரியர்
பதிப்பு: 2024 – விலை: ரூ.350/-
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
தியாகராயர் நகர், சென்னை-17
