அனைத்து நியாய விலை அட்டைதாரர் களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
