டில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலர் சீமா தாகா, கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு அதிரடி காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையில் பல கடத்தல்காரர்கள், கொலைகாரர்களை தீரத்துடன் எதிர்கொண்டு வாகை சூடியுள்ளார். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் கட்டட தொழில் செய்யும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இந்த பெண் சிங்கத்தின் தீரத்தை பாராட்டி சாதாரண காவலர் பதவியிலிருந்து உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
