புதுடில்லி, டிச.30- பொங்கல் விடுமுறை நாளில் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் நாளில் தேர்வு நடத்துவதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒத்திவைப்புக்கான காரணமாக மராட்டிய நகராட்சி தேர்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான காரணம்
மகாராட்டிரா மாநிலத்தில் வரும் ஜனவரி 15, 2026 அன்று மாநகராட்சி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி அன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைக்க இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் முடிவெடுத்துள்ளது.
புதிய அட்டவணை விவரம்
ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலைத் தேர்வு (குரூப்-II), தாள்-5: தணிக்கை மற்றும் நெறிமுறைகள் (Auditing and Ethics) பாடம், தற்போது ஜனவரி 19, 2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதே மய்யங்களில் தேர்வு நடைபெறும். ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள், மாற்றியமைக்கப்பட்ட ஜனவரி 19ஆம் தேதி தேர்விற்கும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பாடங்களுக்கான தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; அவை ஏற்கெனவே அறிவித்தபடி நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் (அய்சிஏஅய்) தெளிவுபடுத்தியுள்ளது.
என்எல்சி நெய்வேலியில்
575 பணியிடங்களுக்குத் தேர்வு!
575 பணியிடங்களுக்குத் தேர்வு!
நெய்வேலி, டிச.30–- என்.எல்.சி.யில் 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: பி.இ., டிப்ளமோ. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. ஊதியம்: ரூ.12,524 – ரூ.15,028. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <<exhttps://www.nlcindia.in/website/en/>>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். பின்னர் விண்ணப்பத்தை The Office of The General Manager, Learning and Development Centre, Block- 20, NLC India Limited, Neyveli – 607 803 என்ற முகவரிக்கு ஜன.2-க்குள் அனுப்பலாம்.
