வலதுசாரி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை திருமாவளவன் கருத்து

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச. 29– மதுரை, ஒத்தக்கடையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று திருமாவளவன் பேசியதாவது:

ஜாதி மறுப்பது, மறுமணம் செய்வது 50 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான செயலாக இருந்தது. இன்றைக்குப் பொது வெளியில் ஊர் அறிய ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடப்பது சமூக சூழலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற திருமணம் குறித்த சுவரொட்டிகளை ஒட்டுவதற்குகூட காவல் துறை அனுமதி மறுக்கிறது.

இன்றும் இதுபோன்ற திருமணங்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. ஜாதிக்குள்ளேயே காதல் நிகழ வேண்டும். ஜாதி மாறி வரக் கூடாது என்ற நிலை இருந்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் திட்டமிட்ட ஒன்று. பல ஆண்டாக திட்டமிட்டு வன்முறையை உருவாக்குகின்றனர். மதத்தின் பெயரால் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது. இந்துக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தி பிரச்சினையைத் தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அது நடக்காததால் ஜாதிப் பெருமை பேசுகின்றனர். இதை ஒரு வேலைத் திட்டமாகவே இந்து ஸநாதன அமைப்புகள் செய்கின்றன.

ஸநாதன சக்திகள் தமிழ்நாட்டில் வேர்பிடிக்க அதிமுக உள்ளிட்ட கட்சிகளை பிடித்துள்ளன. வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும். இடதுசாரி அரசியல் வெற்றி பெற வேண்டும். வலதுசாரி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என, அவர்கள் பின்னங்கால்கள் பிடரியில் பட ஓடும்படி விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது

எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையைக் காட்டுகிறது

சிபிஅய் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை, டிச. 29– இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையைக் காட்டுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களது கணினி பயன்பாட்டுத் திறனையும், படைப்பாக்கத் திறனையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்திருப்பது, அவரது மாணவர் விரோத மனநிலையையே காட்டுகிறது. இது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு 881 கனஅடி நீர்வரத்து

சேலம், டிச. 29– காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவைக் கண்டுள்ளது. நீர்வரத்து: அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 881 கனஅடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த நீர்வரத்து தற்போது மழையற்ற சூழலால் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நீர்மட்டம்: அணையின் தற்போதைய நீர்மட்டம் 101.50 அடியாக நீடிக்கிறது (அணையின் முழு கொள்ளளவு 120 அடி).

நீர் வெளியேற்றம்: பாசனத்திற்காக: டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையை முன்னிட்டு, அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய்: கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்வரத்தை விட (881 கனஅடி) நீர் வெளியேற்றம் (1,400 கனஅடி) அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பதால் நடப்பு பாசனத்திற்கு பாதிப்பு இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

மாணவர்களுக்குப் புத்தகங்கள்
தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மூன்றாம் பருவப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை பள்ளி வாரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை புத்தகங்கள் வந்திருக்கிறது என எக்ஸ் தளத்தில் உடனே அப்டேட் செய்யவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *