நேற்று (28.12.2025) அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திண்டிவனத்தில் காலை உணவு எடுத்துக் கொண்டார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள கழகத் தலைவரின் இணையர் மோகனா அம்மையாரின் மறைந்த (25.12.2025) சகோதரி சூரியா அவர்கள் இல்லத்திற்குச் சென்று அன்னாரின் குடும்பத்தாருடன் உரையாடிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிங்காரப்பேட்டையில் கழகத் தோழர் சென்னகிருஷ்ணன் திருமணத்திற்கு குறித்த நேரத்தில் சென்று, தலைமை தாங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்து வாழ்த்திவிட்டு, கிருஷ்ணகிரியில் மதிய உணவு முடித்து, அங்கிருந்து கழகத் தலைவர் ஓசூர் வந்து சேர்ந்தார். ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கத்தில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.
அதில் இந்தியா கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள், கழகத் தோழர்கள் என்று ஏராளமானோர் கூடி வரவேற்பையே மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றிவிட்டனர். மாலை, அறிஞர் அண்ணா சிலை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சி மறுபடியும் மலர பிரச்சாரம் செய்துவிட்டு, கழகத்தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, விடியற்காலை 3 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.
