நீக்கப்பட்ட வாக்காளர்களில் வங்கதேச, ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்: அபிஷேக் பானர்ஜி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கொல்கத்தா, டிச. 28– மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கா ளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீக்கப்பட்ட வர்களில் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் எவ்வளவு பேர் என்பதை தேர்தல் ஆணை யம் தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செய லாளர் அபிஷேக் பானர்ஜி தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை 10.05 கோடியாகும். இதில் SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் வெறும் 5.79 சதவீதம்தான். SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைந்த சதவீதம். நீக்கப்பட்ட 58.20 லட்சம் வாக்காளர்களில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *