கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவாரூர் மாவட்டத்தில் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம்

29.12.2025 திங்கள்கிழமை

காலை 10 மணி – பருத்தியூர், கொரடாச்சேரி

மாலை 3 மணி – சோழங்கநல்லூர், திருவாரூர்

30.12.2025 செவ்வாய்க்கிழமை

மாலை 3 மணி – மஞ்சக்குடி, குடவாசல்

முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவ்ட்ட கழக செயலாளர்) * கருத்துரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * குறிப்பு: இளைஞரணித் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.இரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).

30.12.2025 செவ்வாய்க்கிழமை
திராவிட மாணவர் கழகம் நடத்தும்
தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்

கோலியனூர்: மாலை 5 மணி *இடம்: கோலியனூர் கூட்டுச் சாலை *வரவேற்புரை: இரா.சரண் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *தலைமை: சு.மாறன் (கோலியனூர் ஒன்றிய தலைவர்)

வளவனூர்: இரவு 7 மணி *இடம்: வளவனூர் *வரவேற்புரை: கு.சஞ்சய் (அறிஞர் அண்ணா கலை கல்லூரி திராவிட மாணவர் கழகம்) *தலைமை: ரா.சிவராமன் (கோலியனூர் ஒன்றிய அமைப்பாளர்)

முன்னிலை: கொ.பூங்கான், கி.கார்வண்ணன், பெ.சக்கரவர்த்தி *தொடக்கவுரை: சே.வ.கோபன்னா (மாவட்டக் கழகத் தலைவர்), அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: அ.சதீஷ் (நகரச் செயலாளர்).

பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 6 மணி *இடம்: சட்டமன்ற உறுப்பினர் அ.அண்ணாத்துரை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பட்டுக்கோட்டை *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டக் காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்) *பொருள்: தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், கழக அமைப்பு பணிகள் *விழைவு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம் *இவண்: கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்)

1.1.2026 வியாழக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்: காலை 10 மணி *இடம்: அகிலகம், லெட்சுமி காலனி, மதுரைச் சாலை, விருதுநகர் *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இல.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: மா.பாரத் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: கழகத் தலைவர் விருதுநகர் வருகை, பெரியார் உலகம் நிதியளிப்பு, கழக அமைப்புப் பணிகள் மற்றும் செயல் திட்டங்கள் *நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட துணைச் செயலாளர்) *விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *இவண்: விடுலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்).

1.1.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2570

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: 2025 கடந்து வந்த பாதை* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *