எங்கள் மனதின் குரலையும் பிரதமர் கேட்கட்டும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்


புதுடில்லி. ஏப். 28
– எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மல்யுத்த வீராங்கனை கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வராக இருந்து வரும் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் குற்றம் சாட்டி வரு கின்றனர். 

பாஜக நாடாளுமன்ற உறுப் பினராகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங்-குக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் போராட் டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங் கனைகள், பின்னர் போராட் டத்தை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மல்யுத்த வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்து உள்ளனர். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ் ரங் புனியா உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். 

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி யான மனதின் குரல், வரும் 30.4.2023 அன்று ஒலிபரப்பாக உள்ளது. இது 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், இதை பிர பலப்படுத்த பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில்,  இதனை தொடர்புபடுத்தி போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், “பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தை களுக்கு கல்வி புகட்டுவோம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனதின் குரலையும் கேட்கிறீர்கள். எங்களின் மனதின் குரலை உங்களால் கேட்க முடியாதா? நாங்கள் பதக்கம் வென்றால் எங்களை உங்களின் இல்லத்திற்கு அழைத்து அதிக மரியாதை செய்கிறீர்கள். எங்களை உங்களின் மகள்கள் என்று அழைக்கிறீர்கள். தற்போது நாங்கள் எங்களின் மனதின் குரலை கேளுங்கள் என்று கோரி போராடிக் கொண்டிருக்கி றோம். நாங்கள் உங்களை சந்தித்து எங்களின் கோரிக்கையை தெரி விக்க விரும்புகிறோம். எங்களை சந்திக்க நீங்கள் முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

மேலும், தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்ற செய்தி பிரதமர் மோடியை இன்னும் எட்டவில்லை என்றே கருதுகி றோம் என தெரிவித்துள்ள சாக்சி மாலிக், அவரை நாங்கள் சந்திக்க முடிந்தால், அவரால் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். 

மேலும், கடந்த 4 நாட்களாக ஜந்தர் மந்தரில் கொசுக்கடிக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக் கும் தங்களை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திக்காதது ஏன் என்றும் சாக்சி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். 

“ஸ்மிருதி இரானி தற்போது ஏன் அமைதி காக்கிறார். கடந்த 4 நாட்களாக கொசுக்கடிக்கு மத்தி யில் நாங்கள் சாலையிலேயே உறங் குகிறோம். ஆனால், நீங்கள் (ஸ்மி ருதி இரானி) ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வர வேண்டும். நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என சாக்சி மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *