கருநாடகாவின் வெற்றியை திருடுகிறார் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது சித்தராமையா குற்றச்சாட்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூர், டிச.27 கருநாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கருநாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண் களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கருநாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் சித்தராமையா, “மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கருநாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற் சாலையை நிறுவியுள்ளது. அய்போன் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *