மும்பை, டிச. 27- ஒன்றிய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசமே இறுதியானது என்று கூறப்படுகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.
அபராத விவரம்
பழைய கார்டுதாரர்கள்: இது வரை ஆதார் – பான் எண்ணை இணைக்காதவர்கள், தற்போது இணைப்பதற்கு ரூ. 1,000 அபராதமாக செலுத்த வேண்டும். புதிய கார்டுதாரர்கள்: 2024 அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை பெற்றவர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இலவ சமாக தங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இணைக்காவிட்டால்
ஏற்படும் பாதிப்புகள்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப் படாத பான் எண்கள் செல்லாததாக (Inoperative) அறிவிக்கப்படும். இதனால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படும்: வரி ரீஃபண்ட் கிடைக் காது: ஒருவர் செலுத்திய கூடுதல் வரி அல்லது வரி பிடித்தங்களை (TDS/TCS), வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து மீண்டும் பெற முடியாது.
வழக்கமாகப் பிடிக்கப்படும் வரியை விட, பான் எண் செல்லாத நிலையில் பிரிவு 206AA மற்றும் 206CCஇன் கீழ் மிக அதிகப்படியான வரி பிடித்தம் செய்யப்படும். நிதி பரிவர்த்தனைகள் பாதிப்பு: வங்கி கணக்கு தொடங்குதல், முதலீடுகள் செய்தல் போன்ற முக்கிய நிதிச் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படும்.
