செய்யாறு, டிச. 27- செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.12.2025 அன்று மாலை 5 மணிக்கு நகர கழக தலைவர் தி.காமராசுவின் படிகலிங்கம் மருந்தகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் அ.இளங் கோவன் தலைமை வகித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட துணைத்தலைவர் சேத்துப்பட்டு.அ.நாகராசன்
வெண்பாக்கம் ஒன்றியம்
தலைவர் டி.சின்னத்துரை, செயலாளர் கு.பரந்தாமன்
ஆரணி நகரம்
தலைவர் – அசோகன், செயலாளர் – வெங்கட்ராமன்
மேற்கு ஆரணி ஒன்றியம்
அமைப்பாளர்-வாசுதேவன்
தீர்மானங்கள்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழா – பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டமான பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி திரட்டியளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – இரண்டு நூல்கள் அறிமுக விழாவினை வெம் பாக்கத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேனாள் மாவட்ட கழக செய லாளர் சேத்துப்பட்டு அ.நாகராசன், மாவட்டச் செயலாளர், பொன்.சுந்தர் மாவட்ட ப.க. தலைவர் வி.வெங்கட்ராமன், மாவட்ட ப.க. செயலாளர் என் .வி கோவிந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலா ளர் எஸ்.அரவிந்தன், செய்யாறு டி.என்.கஜபதி, நகர இளைஞரணி தலைவர் என்.சீனிவாசன், பெ.பரந்தாமன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள். திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் செயலாக்க உரை வழங்கினார்.
வி.பிரசாந்த் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
