கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்துத்துவா வன்முறையினர் வெறியாட்டம்! முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் கண்டனம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜபல்பூர், டிச 26  ஜபல்பூர் – ராய்பூர் உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான் மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது. குணமும் இருக்கிறது. ஆனால், சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல், கலவரங்களில் ஈடுபடுவது, அதுவும், பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும் போதே ஈடுபடுவது, மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் – ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் எவராலும் ஏற்க முடியாது. ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. நாட்டு மக்களை பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பும், கடமையுமாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சில மாநிலங்களில் மதவாத கும்பல்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு, கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்களைச் சீர்குலைத் துள்ள சம்பவங்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்து தாக்குதல் நடத் தப்படுவது ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் பேராபத் தாகும்.

மதவாத கும்பல்களின் இந்த வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் அச்சமின்றி, பாதுகாப்புடன் தங்கள் பண்டிகைகளை கொண்டாட ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவ மக்களையும் தாக்கிய ஹிந்துத்துவ வெறிக்கும்பலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *