மூடச் சடங்கின் உச்சம் உயிருடன் இருக்கும் பெண்ணின் உருவப் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மத்தியபிரதேசம், டிச.24 மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அவரது குடும்பத்தினர்  ஊர் முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, காவல்துறையினர் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

காவல்துறையினர் சவிதாவை குடும்பத்தினருடன் செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்டு  வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

உருவப் பொம்மைக்கு இறுதிச் சடங்கு

சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப் பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதிச் சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான காணொலிகளை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்வி களை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து சவிதாவின் சகோதரர் கூறும்போது, “எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல ஆண்டு வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச் சடங்கு” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *