பெர்லின், டிச.24 ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் (Hertie School) மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயகம் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: பன்னாட்டு கவலை
இந்திய ஜனநாயகம் என்பது வெறும் இந்தியாவின் சொத்து மட்டுமல்ல, அது உலகிற்கே ஒரு பொதுச் சொத்து என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, “இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது ஒட்டுமொத்த பன்னாட்டு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று எச்சரித்தார்.
அரசமைப்பை சிதைக்கும் முயற்சி
பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம்: பாஜக இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்தவும், அதன் மய்யப்புள்ளியை சிதைக்கவும் முயற்சிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தையும், மொழி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தையும் ஒழிக்க பாஜக நினைக்கிறது.
இந்தியாவின் அரசு கட்டமைப் புகள் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப் பட்டுள்ளன. சிபிஅய், அமலாக்கத் துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் இன்று அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன.
தேர்தல் மற்றும் விசாரணை அமைப்புகள்
சமீபத்திய தேர்தல்கள் குறித்துப் பேசிய அவர், ஹரியானா மற்றும் மகாராட்டிரா தேர்தல்கள் நியாயமான முறையில் நடந்ததாகத் தான் கருத வில்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் தேசத்திற்காகச் செயல்பட்டன என்றும், ஆனால் தற்போது அவை பாஜகவின் “சொந்த அமைப்புகள்” போலச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை மட்டுமே குறிவைப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இண்டியா (I.N.D.I.A.) கூட்டணியின் ஒற்றுமை
எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது. எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டிகள் இருந் தாலும், பாஜகவை எதிர்ப்பதில் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் எங்கள் ஒற்றுமையை ஏற்கனவே நிரூபித்துள்ளோம்,” என்று கூறினார்.
