கால அவகாசத்துக்கு முன்பே மெட்ரோ பணிகளை முடிக்கும் தமிழ்நாடு பிறமாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது ஒன்றிய நிதி அமைச்சக குழு பாராட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.23 தமிழ்நாடு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை மீண்டும் மீண்டும் காலகெடு நீடிக்க கோருவதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சரக குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் ஜேஅய்சிஏ உள்ளிட்ட பன்னாட்டு நிதி அமைப்புகளின் உதவியுடன் நடைபெறுகிறது. இதுபோல் மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி, எண்ணூர் வரை 133 கி.மீ. தொலைவுக்கு புறநகர் வட்டச் சாலை (சிபிஆர்ஆர்) அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் துறைமுகங்கள் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு திட்டப்பணிளை ஆய்வு செய்ய 4 அதிகாரிகளை கொண்ட ஒன்றிய நிதி அமைச்சகக் குழு சென்னைக்கு வந்திருந்தது. இவர்களின் 3 நாள் பயணம் நேற்று முன்தினம் (21.12.2025) நிறைவடைந்தது. இக்குழுவானது இரண்டு திட்டங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பலதரப்பட்ட மக்களிடமும் பேசி விசாரித்துள்ளது. இதில் நிதி அமைச்சக குழுவுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாடு இவ்விரண்டு திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை ஆய்வு செய்ய ஒன்றிய நிதி அமைச்சக குழு சென்று வந்துள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்கள் குறித்த நேரத்தில் பணியை முடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பணிகளுக்காக கால அவகாசத்தை நீட்டிப்பது அவற்றின் வழக்கமாக உள்ளது. இதுபோல் ஆந்திர மாநிலம் சமீபத்தில் தனது திட்டங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்தது. தமிழ்நாட்டின் இந்த திட்டங்களை ஆய்வு செய்ய ஒன்றிய நிதி அமைச்சகக் குழு முதன்முறையாக வந்துள்ளது. இக்குழுவின் அறிக்கை அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பணிகள் திருப்தியான முறையில் நடைபெறுவதாக இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *