
பீகார், டிச. 22- தர்பங்கா மன்சரி பகுதியைச் சேர்ந்த இந்தப்பெண் ஜீவிகா தீதி (மகளீர் சுய உதவிக்குழுவில் உள்ளார். இந்தக்குழுவில் உள்ள பல லட்சம் பெண்களுக்கு மோடி ரூ.10,000 தொழில் துவங்குதன் என்ற பெயரில் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பணத்தை பெற்றுகொண்ட இவர் தனது பகுதிப்பெண்கள் அனைவரையும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வற்புறுத்தினார். தேர்தல் நாள் அன்று கூட விதிமுறைகளை மீறி பா.ஜ.க.விற்காக பரப்புரை செய்தார்.
இந்த நிலையில், பாஜக பெரும்பான்மை பலத்தோடு தேர்தலில் வெற்றி பெற்றது, தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு இவர்து ஜீவிகா குழுவினர் தர்பங்கா பாஜக தலைமையத்தில் ஆடிப்பாடி இனிப்பு வழங்கிய காட்சி தான் (முதல் படம்).
ஆனால், காட்சிகள் ஒரு மாதத்திற்குப் பிறகு மாறியது இவர் வசிக்கும் வீடு சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி இவரது வீட்டை இடித்துத் தள்ளியது தர்பங்கா நிர்வாகம்.
ஆனால், இவர் 4 தலை முறைகளாக வீட்டில் குடியிருக்கிறோம் எங்கள் வீடு கட்டியே 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘
மின்சாரம் குடிநீர் இணைப்பு ஆதார் அட்டை ரேசன் உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களும் இந்த வீட்டின் பெயரில் கிடைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசுதான் கழிப்பறை கட்டிகொடுத்தது அப்போது எல்லாம் சட்டவிரோதவீடு என்று இவர்களுக்குத் தெரியவில்லையா?
காலையில் நிர்வாகிகள் வந்து வீடு சட்டவிரோத இடத்தில் உள்ளது என்கிறார்கள். மாலையில் வீட்டை இடிக்கின்றனர். இந்தக் குளிரில் குழந்தைகளோடு நாங்கள் எங்கே செல்வோம் என்று கதறி அழுகிறார் (இரண்டாவது படம்).
இது தொடர்பாக அப்பகுதி ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகர் கூறும்போது இந்த பகுதி நிலத்தின் மீது நீண்ட நாட்களாகவே நில மாபியாக்கள் மீது கண் இருந்தது ஆகவே இந்த வீடுகளுக்கு எல்லாம் பட்டா கொடுங்கள் என்று நாங்கள் குடியரசுத் தலைவர் வரை மனு கொடுத்தோம் அரசும் உத்திரவாதம் கொடுத்தது,
ஆனால் பா.ஜ.க. பெரும்பான்மை பலம் பெற்று வந்த பிறகு இனி அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவையில்லை என்று நிலையில் நில மாபியாக்களின் கைகளில் நிர்வாகத்தைக் கொடுத்து விட்டார்கள் அவர்கள் அதிகாரிகளை மிரட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்காக வீடுகளை இடித்து ஆயிரக்கணக்கான மக்களை நடு தெருவுக்கு கொண்டு வந்து விட்டனர்.
