வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயருகிறது புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 22- நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை.

ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் கடந்த ஜூலை மாதம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிக்க, நீண்டதூரப் பயணத்துக்கான கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சாதாரண ரயில்களில் 215 கி.மீ. தூரத்துக்கு மேற்பட்ட பயணத்துக்கான கட்டணம் கி.மீ.க்கு 1 பைசா உயர்த்தப்படும். மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கான கட்டணம் கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.

இந்த கட்டண உயர்வு டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புறநகர் ரயில் கட்டணம் மற்றும் மாதாந்திர சீசன் கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் இல்லை. அதேபோல, சாதாரண ரயில்களில் 215 கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்களுக்கும் கட்டண உயர்வு இல்லை.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: “ரயில் கட்டண உயர்வு பயணிகளுக்கு சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக ஏ.சி. பெட்டியில் 500 கி.மீ. தூரம் பயணம் செய்வோருக்கான கட்டணம் ரூ.10 மட்டுமே அதிகரிக்கும்.

ரூ.600 கோடி கூடுதல் வருவாய்

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகள் கணிசமாக விரிவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அதிகரித்து வரும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பணியாளர்கள் எண்ணிக்கையை ரயில்வே அதிகரித்துள்ளது. இதனால், ஊதியச் செலவு ரூ.1.15 லட்சம் கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ.60,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2024-2025 நிதி ஆண்டில் ரயில்வேயின் மொத்த செயல்பாட்டுச் செலவு ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க, சரக்குப் போக்குவரத்து வருவாயை அதிகரிப்பதிலும், குறிப்பிட்ட அளவிலான கட்டணச் சீரமைப்பை செயல்படுத்துவதிலும் ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளால், சரக்குப் போக்குவரத்தில் உலகின் 2-ஆவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் – துரைப்பாக்கம்
மெட்ரோ ரயில் நிலையங்களில்

வணிக வளாகத்துடன் நுழைவு வாயில்கள்
ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம்

சென்னை, டிச. 22- சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களுடன் நுழைவு வாயில்கள் கட்ட ரூ.268.80 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்தில் மாதவரம் – சிறுசேரி இடையே 45.4 கி.மீ. தொலைவுக்கு 3ஆவது வழித்தட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை கட்டுவதற்கு ரூ.268.80 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி துரைப்பாக்கத்தில் 3 அடுக்கு அடித்தளம், தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. சோழிங்கநல்லூரில் அடித்தளம் மற்றும் 8 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.

மேலும் வழித்தடம் 3 மற்றும் வழித்தடம் 5-க்கு இடையே இணைப்புப் பாதை உடன் சோழிங்கநல்லூர் வணிகக் கட்டடத்தின் வழியாகச் செல்ல முடியும். இதன் மூலம் வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல முடியும்.

இந்தக் கட்டுமானப் பணிகள் மெட்ரோ பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பயணக் கட்டணத்தை தவிர்த்த வருவாயை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் (Bridge and Roof) நிறுவனத்துக்கு ரூ.268.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் டி.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மந்தைவெளி வளாகம்

இதேபோல இந்த வழித்தடத்தில் உள்ள மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மந்தைவெளி பேருந்து பணிமனை ஆகியவற்றை இணைக்கும் விதமாக மந்தைவெளி பணிமனையை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தவும் பிரிட்ஜ் ஆண்ட் ரூஃப் நிறுவனத்துக்கு ரூ.167.08 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி 29,385 சதுர மீட்டர் பரப்பளவில் 2 கட்டடங்கள் கட்டப்படும். ஒவ்வொரு கட்டடமும் 2 அடுக்கு அடித்தளம், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும். இங்கு பேருந்துகளில் பயணிகள் ஏறி இறக்குவதற்கான வசதிகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *