சொத்துக்குவிப்பு வழக்கு பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லா விசாரணை தவறு முதலமைச்சர் சித்தராமையா

2 Min Read

இந்தியா

பெங்களூரு,நவ.26 – கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவ குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் சி.பி.அய். விசாரணைக்கு ஒப்ப டைத்தது தவறு என்பதால், அந்த அனுமதியை திரும்பப் பெற்றுள்ளோம் என்று முதல மைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

கருநாடக காங்கிரஸ் தலை வரும், துணை முதலமைச்சரு மான டி.கே.சிவகுமாருக்கு எதி ரான சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு ஒப் படைக்க, 2019 செப். 25-ஆம் தேதி முந்தைய பாஜக அரசு அனுமதி அளித்திருந்தது. 

அதனடிப்படையில், 2020 அக். 3-ஆம் தேதி டி.கே.சிவ குமாருக்கு எதிராக சி.பி.அய். வழக்குப் பதிவு செய்து விசார ணையைத் தொடங்கியது.

2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் டி.கே.சிவகுமார் மின் துறை அமைச்சராக இருந்தபோது ரூ. 74.93 கோடி வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட் டிருந்தது. இந்நிலையில், முந் தைய பாஜக அரசு அளித்திருந்த விசாரணை அனுமதியை திரும் பப் பெற கருநாடக அமைச்சர வையில் 23.11.2023 அன்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூருவில் நேற்று (24.11.2023)செய்தியாளர்க ளிடம் முதலமைச்சர் சித்தரா மையா கூறியதாவது:

டி.கே.சிவகுமாருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.அய். விசாரிக்க முந்தைய பா.ஜ.க. அரசு அளித்திருந்த அனுமதி சட்டவிரோதமானது என்பது எங்கள் கருத்து.

அரசு ஊழியருக்கு எதிராக வழக்குப் பதிந்து விசாரணை நடத்த அரசின் அனுமதி தேவை. ஒருவேளை அமைச்சராக இருந் தால், ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். டி.கே.சிவகுமார் விவகாரத்தில், வழக்குத் தொடர பேரவைத் தலைவரின் அனுமதி பெறப்பட வில்லை. சிபிஅய் விசாரணைக்கு ஒப்படைத்த போது டி.கே.சிவ குமார் எம்எல்ஏ-வாக இருந்தார்.

இது தொடர்பாக அரசு தலைமை வழக்குரைஞர் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக, அன் றைய முதலமைச்சர் எடியூரப் பாவின் அழுத்தம் காரணமாக சி.பி.அய். விசாரணைக்கு வழக்கை ஒப்படைக்க தலைமைச் செயலாளர் அனுமதி அளித்து விட்டார். இது சட்டப்படியாக இல்லாததால், இதை சட்ட விரோதமானது என்கிறோம்.

நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய் திருக்கிறது. ஏற்கெனவே அளிக் கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறுகிறோம் என்பதுதான் எங் கள் முடிவு. நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தடையேதுமில்லை. அதில் நாங்கள் தலையிட முடி யாது என்றார்.

இதனிடையே, தன் மீது சி.பி.அய். வழக்குப் பதிவுசெய்ய அனுமதி அளித்ததற்கு எதிராக டி.கே.சிவகுமார் தொடர்ந்தி ருந்த மனு மீதான விசாரணையை நவ. 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கருநாடக உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *