காந்தி ஊரக தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தை சீர்குலைத்ததை
உலக அறிஞர்கள் வரலாற்றுப் பிழை என்று கண்டித்திருக்கிறார்கள்!
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக
எதையும் இழக்கத் தயாராக இருக்கிறது தமிழ்நாடு!
ஜெயங்கொண்டம், டிச.22 இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது ஆர்.எஸ்.எஸ். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மனுதர்மம் தான் இருக்க வேண்டும் என்று சொன்னது. ‘ஆர்கனைசர்’ இதழிலும் அதை வெளியிட்டது. திராவிடர் இயக்கத்தின் அடித்தளம் நீதிக்கட்சி; அதில் கட்டுமானத்தை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா; அதை பொலிவோடும், வலிவோடும் ஆக்கியவர் கலைஞர்; அதை இன்னமும் கட்டிக்காத்து வருபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஜெயங்கொண்டம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கழகத் தலைவர் எழுச்சி உரை ஆற்றினார்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்
ஜெயங்கொண்டம் கழக மாவட்டம் சார்பில் ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் பிரச்சாரக் கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் 20.12.2025 அன்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டக் காப்பாளர் சி.காமராஜ் தலைமை ஏற்க, மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், வி.சி.க. மாவட்டச் செயலாளர் இரா.கதிரவன், சி.பி.அய்.(எம்) மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
மாவட்டக் காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரத்தின. இராமச்சதிரன், ராஜா. அசோகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர்கள் க.கார்த்திக், பொன்.செந்தில்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், நிதிக்குழு பொருளாளர் தியாக முருகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முறையே இரா.குணசேகரன் புத்தகங்களை அறிமுகம் செய்து உரையாற்றியும், இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் சிறப்பித்தனர். தொடர்ந்து ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டியலை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி வாசித்தார். உரியவர்கள் நிதியை காசோலையாக வழங்கினர். மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது. கழகத் தலைவருக்கும் முன்னிலை வகித்துச் சிறப்பித்தவர்களுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. அமைச்சருக்கும், சட்ட மன்ற உறுப்பினருக்கும் கழகத் தலைவர் சிறப்பு செய்தார். அவர்களும் கழகத் தலைவருக்கு சிறப்பு செய்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், “தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளில் பெரியார் உலகம் சிறப்பாக முடியக்கூடிய வாய்ப்பு இருக்கும்” என்று குறிப்பிட்டார். நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, பக்கத்தில் அமர்ந்திருந்த வி.சி.க.வைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமார் அவர்களை சுட்டிக்காட்டி, “பெரியார் மட்டும் பிறந்திருந்திருக்காவிட்டால் நகர் மன்றத்திற்கு ஒரு பெண் தலைவராக வந்திருக்க முடியுமா?” “நாம்தாம் இப்படி தோளில் துண்டு போட்டிருக்க முடியுமா? பெண்கள் எல்லாரும் இப்படி நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க முடியுமா?’’ என்று கேள்விகளை அடுக்கினார். தொடர்ந்து திராவிடர் இயக்கத்தின் அரிய சாதனையை ஒன்றை சுட்டிக்காட்டினார். அதாவது, “கடந்த மார்ச் மாதம் நான் பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம் ஒருங்கிணைத்திருந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது மெல்போர்னில் எங்களை வரவேற்றது ஜெயங்கொண்டத்தில் படித்து போனவர்கள்தான்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “பெரியார் என்ன செய்துவிட்டார்? என்று கேட்கிறார்கள். இதைத்தான் செய்தார்” என்றார். மேலும் அவர், மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக் காட்டி, “குல தர்மத்தை வலியுறுத்திய இதுதான் நம்மை ஆண்டு கொண்டிருந்தது. ராஜாஜியும் இதைத்தான் கொண்டு வர முயன்றார். இதை தலைகீழாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார் – இதைத்தான் பெரியார் செய்தார்” என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ”நம்மையும் தமிழ்நாட்டையும் தலை குனிய விடமாட்டேன் என்று சொல்லும் முதலமைச்சரின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்” என்றும், ‘‘ஓட்டுத்திருட்டு இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க. மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்திருக்காது” என்றும், ‘‘மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைப்பதன் மூலம், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், ஏழைகளுக்கு எதிராகவும் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஆகவே இதைக் கண்டிப்பதற்காக தந்தை பெரியாரின் நினைவு நாளில்
அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்” என்றும் கூறி அனைவரும் அவரவர் வாக்குகளை சரி பாருங்கள் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கும்பகோணம் புறப்பட்டார்.
பங்கேற்றோர்
மாவட்டத் தொழிலாளர் அணி துணைத் தலைவர் மா.கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மா.சங்கர், லெ.தமிழரசன், ஆ.இளவழகன், வெ.இளவரசன், மணிகண்டன், கலியபெருமாள், துரை பிரபாகரன், இரா.தமிழரசன், இர.இராமச்சந்திரன், இராச.செல்வகுமார், சி.சிவக்கொழுந்து, சி.தமிழ்சேரகன், த.செந்தில், கோ.பாண்டியன்,அண்ணாமலை, அ.சேக்கிழார், ஆசிரியர் கலைவாணன், வழக்குரைஞர் வேலவன் மற்றும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கும்பகோணத்தில்…
கும்பகோணம் மாவட்டம் சார்பில் அதே 20.12.2025 அன்று அதே தலைப்பில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தொடர் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜாதி ஒழிப்பு வீரர்கள் திருநாகேஸ்வரம் அ.மொட்டையன், படைத்தலைவர் தற்கொலை கோவிந்தராஜ் ஆகியோர் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் ஜெயங்கொண்டம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு கும்பகோணம் வந்து சேர்ந்தார். கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். உரை நிறுத்தப்பட்டு தலைவருக்கு எழுச்சிகரமான வரவேற்பு மாவட்டக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளரின் உரை தொடர்ந்தது. தொடர்ந்து நிகழ்ச்சி முறைப்படி தொடங்கியது. நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமை ஏற்று சிறப்பித்தார். செயலாளர் சு.துரைராசு அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், கும்பகோணம் மாவட்டக் காப்பாளர்கள் வை.இளங்கோவன், மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் க.குருசாமி, ப.க.பொதுச்செயலாளர் வி.மோகன், மாவட்ட ப.க.தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்சு.விஜயகுமார், மாநகரத் தலைவர் க.சிவக்குமார், ஆ.தமிழ்மணி, மாவட்ட துணைச் செயலாளர் துரை.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் வி.அழகுவேல் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், குடந்தை மாநகர துணை மேயர் சுப.தமிழழகன், ம.தி.மு.க.துணைப்பொதுச்செயலாளர் இரா.முருகன், வி.சி.க.மண்டலப் பொறூப்பாளர் சா.விவேகானந்தன், விடுதலை தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தை அரசன், வி.சி.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் கா.செ.முல்லைவளவன், நீலப்புலிகள் கட்சித் தலைவர் ஆ.இளங்கோவன், ம.தி.மு.க.தஞ்சை மாவட்டத் தலைவர் செல்லபாண்டியன், தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் டி.ஆர்.சோமசுந்தரம், தஞ்சை மாவட்ட சி.பி.அய்.மு.அ.பாரதி, ம.ம.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் ரஹ்மத் அலி, த.வா.க. தஞ்சை மாவட்டத் தலைஅர் மா.செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு
அடுத்து பெரியார் உலகம் நிதியளிப்பு நடைபெற்றது. கும்பகோணம் மாவட்டம் சார்பாக இரண்டாம் தவணையாக ரூ.15,63,200 /- வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கழகத் தலைவருக்கு மாவட்டத்தின் சார்பாகவும், அனைத்துக் கட்சிப்பிரமுகர்கள் சார்பாகவும் மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக கழகத் தலைவர் இரவு 9.15 மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். அவர் தனது உரையை, “பெரியார் உலகத்திற்கு எல்லா மாவட்டங்களிலிருந்தும் நன்கொடைகளை வழங்கி, சிறப்பாக ஆதரவு தருகிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றே தொடங்கினார். தொடர்ந்து, நல்ல பனி பொழிந்துகொண்டிருந்தது. மக்கள் கலையாமல் அமர்ந்திருந்தனர். அதைச் சுட்டிக்காட்டி, “உங்களுக்கோ பனி; எங்களுக்கோ பணி. அதைச் செய்யாமல் இருக்க முடியாது” என்று கலகலப்பாக பேசினார். மக்கள் ரசித்து சிரித்தனர். தொடர்ந்து அவர், “நாங்கள் எதற்காக இப்படி தமிழ்நாடு முழுவதுமாக சுற்றி அலைகிறோம்” என்று கேள்வி கேட்டு, “ஆர்.எஸ்.எஸ்.சின் பிடியில் இந்த தமிழ்நாடு சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி சுற்றி வருகிறோம்” என்றார். மேலும் அவர், “ஆர்.எஸ்.எஸ். இந்து நாடு; என் மதம்; இந்து மதம்; ஒரே மொழி சமஸ்கிருதம் என்ற இலக்கைக் கொண்டு இயங்குகிறது. இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் திராவிடம் பிறவி பேதத்திற்கு எதிரானது. அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையை உடையது. தந்தை பெரியார் செய்த அறிவுப்புரட்சியின் மூலம்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி ஜாதி ஒழிப்பில் முக்கியமான ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம்” என்றார். ‘‘பா.ஜ.க.வின் திரிசூலம் சி.பி.அய்., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்பது இப்போது நான்கு சூலங்களாக தேர்தல் கமிசன், அய்ந்தாம் சூலமாக நீதித்துறையாக மாறியிருக்கிறது” என்று குறிப்பிட்டார். மதசுதந்திரம் என்பது லகான் இல்லாத குதிரை இல்லை என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி, திருப்பரங்குன்றத்தில் நடைபெற்று வரும் சட்டத்திற்கு புறம்பானவற்றை விவரித்தார். இறுதியில் ‘‘எல்லா நெருக்கடிகளிலிருந்தும் ‘திராவிட மாடல்’ அரசு வெற்றி பெறும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக திராவிட மாணவர் கழக அமைப்பாளர் கா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். வ.அழகுவேல், மு.திரிபுரசுந்தரி, நா.கலியபெருமாள், சு.கலியமூர்த்தி, க.மோகன், து.சரவணன், ந,காமராஜ், கோவி.மகாலிங்கம், ந.செல்வம், க.பாவனிசங்கர், சு.சேதுராமன், பீ.இரமேஷ், எம்.என்.கணேசன், தங்க.பூவானந்தம், க.முருகேசன், சி.இராமச்சந்திரன், த.தில்ராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
