சோனியா காந்தி விஷக்கன்னியாம் பி.ஜே.பி. மேனாள் அமைச்சர் தரக்குறைவு பேச்சு

2 Min Read

அரசியல்

பெங்களூரு, ஏப். 29- கருநாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகுடா படேல். இவர் தேர்தல் யத்நல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந் தியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக சட்ட மன்ற உறுப்பினர் பசனகுடா கூறு கையில், ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை ஏற்றுக் கொண்டு விட்டது. ஒருகாலத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. பின்னர், சிவப்புக் கம்பளம் விரித்து பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

இப்போது காங்கிரசால் பிரத மர் மோடியை கோப்ரா பாம்புடன் ஒப்பிடுகின்றனர். பிரதமர் மோடி விஷத்தை கக்குகிறார் என்று கூறுகின்றனர். சோனியா காந்தி விஷம் நிறைந்த பெண்ணா? சீனா, பாகிஸ்தானுக்கு ஏஜெண்டாக இருந்து சோனியா காந்தி அவர் களுக்காக வேலை செய்கிறார்’ என்றார்.

கண்டனம்

பெங்களூரு காங்கிரஸ் அலுவ லகத்தில் டி.கே.சிவக்குமார் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சோனியா காந்திக்கு பிரதமரா கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பதவியை அவர் தியாகம் செய்தார். நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவ ராக பணியாற்றினார். நான் டில்லி திகார் சிறையில் இருந்தபோது, என்னை நேரில் வந்து சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்து சென்றார். அவரை பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் சட்டமன்ற உறுப்பினர், விஷ கன்னி என்று மிகவும் தரக்குறை வாக விமர்சித்துள்ளார்.

இந்த விமர்சனத்தை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அவர் கூறிய கருத்துக்காக பிரதமர் மோடியும், முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மையும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது சோனியா காந்திக்கு மட்டும் ஏற்பட்ட அவ மானம் இல்லை, ஒட்டுமொத்த பெண்களுக்கு ஏற்பட்ட அவமா னம். ஜே.பி.நட்டாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். பெண்களை அவமதிப்பது பா.ஜனதாவின் பழக் கம். அவர்கள் நேரு குடும்பத்தினரை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரதமர் மோடி சோனியா காந்தியை ஜெர்சி பசு என்று அழைத்தார். இது தான் பிரதமர் மோடியின் கலாச்சாரமா?. சோனியா காந்தியை காங்கிரசின் விதவை என்று கூறினர். எங்களின் தாயார், உங்களின் தாயார் விதவை அல்லவா?.

நாட்டில் மாற்றம் கருநாடகத் தில் இருந்து தொடங்க உள்ளது. கருநாடகம் இந்திரா காந்திக்கு மிகச்சிறந்த மறுவாய்ப்பு கொடுத் தது. சோனியா காந்திக்கு பலம் கொடுத்தது. காங்கிரஸ் தொண் டர்கள் வெகுண்டு எழுவதற்கு முன்பு பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை மன்னிப்பு கேட்க வேண்டும். 50 லட்சம் தொண்டர் களுடன் பிரதமர் மோடி காணொ லியில் கலந்துரையாடினார். 

இதற்கு பா.ஜனதாவினர் அனு மதி பெற்றனரா?. பிரதமர் மோடி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறிய கருத்துக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *