மத்தியப் பிரதேச அய்.ஏ.எஸ். அதிகாரியின் பேச்சு
போபால், டிச. 21– மத்தியப் பிரதேச தாழ்த்தப்பட்ட பழங்குடியினச் சமூக நலத்துறை இணை ஆணையர் மீனாட்சி சிங் மாநில அரசின் நலத்திட்டமான அஜாக்ஸ் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின அமைச்சகத்தால் நடத்தப்படும் நலத்திட்டம்) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பேசும் போது ஜாதிய ரீதியில் அவர் பேசிய பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது.
அவர் பேசும்போது “அரசு அதிகாரிகளாக உள்ள தாழ்த்தப் பட்ட பழங்குடியின அதிகாரிகள் அவர்களது சமூகப் பிள்ளைகளின் அக்கறையில் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தை களுக்கு தங்களின் ஜாதியைச் சொல்லி வளர்க்க வேண்டும் ஜாதிய உணர்வுடன் இருப்பது இன்றைய காலத்தின் தேவை” என்று குறிப்பிட்டார்.
இவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகிறது.
இதே துறையில் ஆணையராக இருந்த சந்தோஷ் வர்மாவும் இதே போன்று இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
அவர் இடமாற்றம் பெற்றும் சென்றுவிட்டார். அவர் இடத்திற்கு வந்த பெண் ஆணையரும் இதே போன்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்து வருகிறார்.
