மகாத்மா காந்தி பெயர் நீக்கம் நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நள்ளிரவில் போராட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.20 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி – ஜி ராம் – ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை கண்டித்தும், மசோதா வின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளா கத்தில் 18.12.2025 அன்று நள்ளிரவு தர்ணாவை தொடங்கினர். இந்த தர்ணா நேற்று (19.12.2025) மதியம் 12 மணி வரை நீடித்தது.

இதே மசோதா தொடர்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உட்பட பல்வேறு எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் நேற்று (19.12.2025) காலை நாடாளு மன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது பிரியங்கா கூறும்போது, “குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாட்களில் விபி – ஜி ராம் – ஜி மசோதாவை ஒன்றிய அரசு திட்டமிட்டு நிறைவேற்றி உள்ளது. தேசத்தந்தை காந்தியடிகளின் பெயர் மசோதாவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, “காந்தியின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் பின்புறத்துக்கு காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன” என்று குற்றம் சாட்டினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *