தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி, டிச.19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் 93ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார்மணியம்மை மருத்துவமனையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் டிச.14 அன்று நடைபெற்றது.
இம்மருத்துவ முகாம் பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன், திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் சி.தியாக ஆர்த்தி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் 146 புறநோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 17 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹார்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனைக்கு 10க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பொது மருத்துவமும் நடைபெற்றது. மருத்துவ முகாமில் மருத்துவர்கள் சித்ரா, சவுமியா, துர்கா தேவி ஆகியோர் நோயாளி களுக்கு சிகிச்சை அளித் தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் மற்றும் செவிலியர்கள், துவாக்குடிமலை லயன்ஸ் சங்க நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
