எல்லோரும் பெரியார் நூல்களை படிக்க வேண்டும். பெரியாரைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தக் காலத்து இளைஞர்கள் அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் என்ன நிலையில் இருந்தோம், இப்போது எதை கடந்து, இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் ஜாதிய படிநிலைகள் மிக மிகக் கொடுமையானது. இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், தனக்குக் கீழே தாழ்ந்த ஜாதிகள் இருக்கிறது என்றும் நம்புகிறான். அன்றைய எண்ணம் கொண்டதால் தான் சக மனிதனை இழிவாக நடத்த நினைக்கிறான். அது மிகக் கேவலமானது என்பதை உணர வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம். சம உரிமை, சம வாய்ப்பு உள்ள அனைவரும் சகோதரத்துவமும் சமத்துவமும் கொண்டு உழைத்து வாழ வேண்டும்.
இவ்வாறு புத்தகக் காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வருகை தந்திருந்த இருவரில் ஒருவர் மிகத் தெளிவாக தன்னுடைய கருத்தை Periyar Vision OTT-க்காக ‘சமத்துவமும் சகோதரத்துவமும்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். இன்றே பெரியார் காணொலி வலைதளக் காட்சியில் காணுங்கள்.
– பி.கதிரேசன், அந்தேரி, மும்பை.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
