திராவிடர் ஆயுதம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டிசம்பர் 24

தந்தை பெரியாரின்

நினைவு நாள்.

 

தமிழரின் வாழ்வுயர

சூத்திரப் பட்டம் ஒழிய

கல்வி பெற அறிவு பெற

திராவிடர் வாழ்வு பெற

உழைத்தவரே எங்கள்

ஆயுதமே பெரியாரே

வாழிய வாழியவே!!

 

சூத்திர அடிமை

என்பதை ஒழித்து

அனைவரும் சமம் என்றும்

அனைவரும்

சொத்து வாங்கவும்

பெண் குழந்தை

கொலை தடுக்கவும்

ஆங்கிலேயர் சட்டம் தந்தார்

அய்யா நீ ஆதரித்தாய்

அதனாலே மாண்பு பெற்றோம்

பெரியார் வாழிய வாழியவே!!!!

 

ஆரியர்க்கும்

தண்டனைச் சட்டம்

நம் பெண்கள்

திருமணம் ஆன பின்பு

ஏழு நாட்கள் ஆரியனுடன்

இருக்க வேண்டும் என்பதற்கும்

தடைசட்டம்

குழந்தைகள்

திருமண தடைச் சட்டம்

ஆங்கிலேயர் கொண்டு

வந்தார் ஆதரித்தீர்

அய்யாவே பெரியாரே

வாழிய வாழியவே!

 

விதவைகள்

உடன்கட்டை ஏறுகிற

பாதகம் ஒழித்திட சட்டம்

சூத்திரர்கள்

கல்வி பயில
புரட்சித் திட்டம்

 

சூத்திரர்கள் தங்களுக்கு

முதல் ஆண் குழந்தை

பிறந்தால் கங்கையிலே

போடவேண்டும் என்ற

கங்கா தானத்தை

தடுக்க சட்டம்

சூத்திரர்கள் சமமாக

நாற்காலியில் உட்கார

சட்டம்

 

கொடிய இந்து

மனுதர்ம சட்டத்திற்கு

தடை சட்டம் என்று

சீர்திருத்தம் கொண்டு

வந்த ஆங்கிலேயரை

ஆதரித்த காரணத்தால்

அய்யா பெரியாரை

எதிர்க்கின்றார் பூணூல்

கூட்டத்தார் பதறிக்

கதறிக் குதிக்கின்றார்

நம் தலைவர் பெரியார்

நெருப்பாக எரிகின்றார்

சமூக நீதி

எரிமலையாக வெடிக்கின்றார்

பெரியார் வாழிய வாழியவே!

 

ஜாதியையும் மதத்தையும்

காரணமான கடவுளையும்

கோயிலையும்

அழிக்கச் சொன்னார்

அறிவு வளர பெரியார்

படிக்கச் சொன்னார்.

இனிவரும் உலகின்

மாற்றத்தை அறிவியல்

வளர்ச்சி அதிசயத்தை

அன்றே சொன்ன

அறிவாயுதமாவார்

பெரியார்

சுயசிந்தனையாளராவார்

எப்போதும் மனுவுக்கு

எதிரியுமாவார்

ஆரியம் தகர்க்கின்ற

ஆயுதமாவார்

ஜாதி மத நோய்கள்

தீர்க்கும் மருத்துவராவார்

பெண்ணினம் உயரக்

காரணமாவார்

பொல்லாத மூடநம்பிக்கை

அழிக்கும் கருவியுமாவார்.

இல்லாத பொய்புரட்டுக்கு

எந்நாளும் எதிரியாவார்

பாம்பினும் கொடிய

விஷம் கொண்ட ஆரிய

சூழ்ச்சிகள் அழிக்கும்

அணுகுண்டாவார்

தள்ளாத வயதிலும்

தளராமல் உழைத்த

வெண்தாடிப் பெரியார்

வாழிய வாழியவே!!!!!!

 

எங்கள் தலைவா

சிங்கத் தலைவா

உங்கள் கொள்கை

வழி நடப்போம்

உண்மை சொல்வோம்

உரக்கச் சொல்வோம்

வாழ்க பெரியார்!

வாழ்க பெரியார்!!

வாழிய வாழியவே!!!

 

உங்கள் நினைவு நாளில்

திராவிடம் காப்போம்!

திராவிடம் காப்போம்!!

சபதம் ஏற்போம்!!!

 

– ச.மணிவண்ணன்

மாவட்ட தலைவர்,

திராவிடர் கழகம்

துறையூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *