நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும்,
அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான்!
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான்!
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, டிச.19 நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான். இதனை உடைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; அதேமாதிரி காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே! நம் யாருக்கும் பாதுகாப்பு கிடையாதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான்! சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
- கலவரம், உயிர்ச்சேதம் ஏற்பட்டால், பொறுப்பு ஏற்பீர்களா?
- அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
- நீதித் துறையை அவமதித்த செய்த செயல்!
- நாங்கள் யாருக்கும் கட்டுப்படமாட்டோம் என்று சொல்வதற்கு ஒழுக்கம் இருக்கிறதா?
- சட்ட திட்ட வரைமுறை இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிடலாமா?
- நியாயங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது!
- முழு பொறுப்பு காவல் துறையினருக்குத்தானே!
- நீதிபதியே சட்டத்தை வளைக்கலாமா? நீதி வளையலாமா?
கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள எதிர் அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிரான – எது கிடைத்தாலும், தி.மு.க. விற்கு அதை அரசியல் அவதூறுக்கு உரிய மூலதன மாக்கிக் கொள்ள முயலுவது மிகவும் தவறானது. பொதுநலன், மக்கள் நலனை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டாமா?
ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன், நாமெல்லாம் இந்தக் கூட்டத்திற்கு வரும்போது, ‘உங்களுக்கு ஆபத்து இருக்கிறது; நீங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போகக்கூடாது; அந்தக் கூட்டத்தை ரத்து செய்கிறோம்’’ என்று காவல்துறை சொன்னால், ‘‘இல்லை, இல்லை, நாங்கள் கூட்டத்தை நடத்தித்தான் தீருவோம்’’ என்று சொல்ல முடியுமா? காவல்துறை அனுமதியோடு நடத்தவேண்டிய நிகழ்வாகும். அந்த நிகழ்வால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் என்று காவல்துறை தகவல் பெற்று, தடை செய்தால், பொறுப்பானவர்கள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டாமா?
கலவரம், உயிர்ச்சேதம் ஏற்பட்டால்,
பொறுப்பு ஏற்பீர்களா?
பொறுப்பு ஏற்பீர்களா?
கட்டுப்பாடு என்பது உண்டா, இல்லையா? எனவே 144 தடை உத்தரவு போடுகிறார்கள் என்றால், ‘அதை நான் ரத்து செய்கிறேன்’ என்று சொன்னால், நிலைமை என்னாகும்? கலவரம், உயிர்ச்சேதம் ஏற்பட்டால், பொறுப்பு ஏற்பீர்களா? வழியில் கலவரம் நடந்தால், நீதிபதிகள்கூட வீட்டிற்குப்போக முடியாதே? காவல்துறையினர்தானே அவர்களுக்கும் கூட தக்கப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும்?
இந்தப் பக்கம் ஒரு பெரிய கலவரம் நடக்கிறது; நீங்கள் அந்த வழியாகப் போகக்கூடாது என்று சொன்னால், ‘‘இல்லை, இல்லை, அந்த வழியாகத்தான் நான் போவேன்’’ என்று சொன்னால், அதனுடைய விளைவு என்னாகும்? என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் மதச் சுதந்திர உரிமைகூட கட்டுப்பாட்டுக்கு அடங்கியதே ஆகும்.
அரசியலமைப்புச் சட்டம்
கூறுவது என்ன?
கூறுவது என்ன?
அரசியலமைப்புச் சட்டம் Article 25, 26 என்பவை
‘‘subject to Public Order, Morality and Health and to the other provisions of this Part’’ என்றுதானே கூறுகிறது!
நீதிபதிகள் இதனை சரிவரப் புரிந்து தீர்ப்பளிக்க வேண்டியது அவர்களது கடமை அல்லவா?
கரோனா தொற்றுக் காலகட்டத்தில், நடந்தது என்ன? நெருக்கமாகத் தும்மினாலே தொற்று பரவி விடும் அபாயம் இருந்தது! அதனால், கடவுள்களுக்கெல்லாம்கூட போர்வை போர்த்தி விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடந்தனவா? அன்றைய காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி இல்லையே! அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்தது! ஏன் கோயில் திருவிழாக்கள் தடுக்கப்பட்டன? நடைபெறவில்லை என்று யாராவது கேட்டார்களா?
‘‘நாங்கள் பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தித்தான் தீருவோம்’’ என்று ஒரு சிலர் சொன்னபோது, ‘‘முடியாது, நீங்கள் அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்களே அன்று, மறந்துவிட்டதா?
‘‘subject to public order, morality, and health’’
ஆகவேதான், அதில் தெளிவாகச் சொல்கிறார்கள். அதில் ஒரு பகுதியில்,
‘‘Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law’’ என்ற உரிமையை நீதிபதி மதித்தாரா?
நீதித் துறையை அவமதித்த செய்த செயல்!
ஓர் அரசு முடிவு செய்தால், அந்த முடிவைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது.
‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை காலையில் என் முன்னால் ஆஜராக வேண்டும். அப்படி இல்லை யென்றால், அவரைக் கைது செய்து கொண்டு வாருங்கள்’’ என்று ஒரு நீதிபதி உத்தரவு போட்டால், அப்படி அவர் ஆஜராகவில்லை என்றால், இது நீதித் துறை அவமதிப்பு செயல்.
ஆகவேதான் நண்பர்களே, குடியரசுத் தலைவராக இருந்தாலும், நீதிபதிகளாக இருந்தாலும், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான். இதனை உடைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதன்படிதான் நாம் பேசுகிறோம்.
அதே மாதிரி அரசியலமைப்புச் சட்டம் 26 ஆவது பிரிவு என்று சொல்லும்போது, ஒரே ஒரு விஷ யத்தைத்தான் மாற்றியிருக்கிறார்கள்.
‘‘Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right’’ —
என்று சொல்லி முடித்துவிட்டார்கள்.
நாங்கள் யாருக்கும் கட்டுப்படமாட்டோம் என்று சொல்வதற்கு ஒழுக்கம் இருக்கிறதா?
ஆகவே, எங்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது, நாங்கள் யாருக்கும் கட்டுப்படமாட்டோம் என்று சொல்வதற்கு ஒழுக்கம் இருக்கிறதா?
ஆனால், இதைத் தூக்கி எறிந்துவிட்டு, பல நீதிபதி கள் ஆணையிடலாமா?
அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். எனவே, ‘தயவு செய்து மாண்பமை நீதிபதிகளே, அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுங்கள்’ என்று சொல்கிறோம். பதவிப் பிரமாணம் எடுத்ததை மறந்துவிட்டுக் கட மையாற்றலாமா? இதில் என்ன தவறு? நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் என்பதற்காகத்தானே இந்தக் கூட்டம். அந்த உறுதிமொழிப்படி நீங்கள் நடக்கவேண்டாமா? அந்த உறுதிமொழிப்படி நீங்கள் நடக்கவில்லை. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி அதைச் செய்து கொண்டிருக்கிறார்.
சட்ட திட்ட வரைமுறை இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிடலாமா?
யார் மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது. உடனே கொண்டுவாருங்கள்; உடனே ஆறு மணி என்றால், 6.05 மணிக்கு வாங்க. அன்றைக்கு ஒரு பக்கத்தில் மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்களே, சட்ட திட்ட வரைமுறை இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விடலாமா?
நாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும் போது, ஜஸ்டிஸ் கைலாசம் அவர்களை, சட்டக் கல்லூரி விடுதி விழாவிற்காக அழைத்திருந்தோம். அவர் பின்னா ளில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக வந்தவர். அவர் எங்களுக்கு சுவையான செய்தி ஒன்றைச் சொன்னார்: ‘‘நான் கிரிமினல் லாயராக இருந்து ‘பிராக்டீஸ்’ செய்யும்போது, ஒரு ‘மெத்தட்’ உண்டு. அது என்னவென்றால், அப்போ திருந்த (வெள்ளைக்கார) அரசு, யாரையாவது கைது செய்து, வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாலையில் கொண்டு வருவார்கள். அடுத்த நாள் அவர்கள் சிறையில் இருந்தால், உடனே மொட்டை அடித்துவிடுவார்கள்.
அதனால், உடனே தங்களுக்கு அவசர ஜாமீன் (Bail) வாங்கவேண்டும் என்பதற்காக, பீஸ் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார்கள். காரணம், அடுத்த நாள் இருந்தால், மொட்டை அடித்திடுவார்களே, அது அவர்க ளுக்கு அவமானம் என்று கருதுவார்கள்.
நியாயங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது!
எதற்காக இதைச் சொல்றோம் என்றால், நியாயங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான். அதுதான் அடிப்படை.
அடுத்தபடியாக மிக முக்கியமான ஒன்றைச் சுட்டிக் காட்டவேண்டும். சட்டம் ஒழுங்கு என்று சொன்னால், அந்தச் சட்டம் ஒழுங்கு யாருக்கு உரியது? மாநில அரசுக்கு உரியது அல்லவா! அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அல்லவா! அந்தச் சட்டம் ஒழுங்கு பற்றிக் கவலைப்படாமல் நீதிபதி உத்தரவு போடுவதா?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்க வேண்டிய ஓர் அரசு, காப்பாற்றவேண்டும் என்று நினைக்கின்ற மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடுகிறார். காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற காவல்துறையினரைத் தாக்கிய, மத வாதிகள், கிளர்ச்சியாளர்கள், அவர்களது மண்டையை உடைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாமா, நீதிபதி? மாநில உரிமைகளையும் தூக்கி எறிகிறார்கள்; ஒன்றிய காவல்துறையினரை அனுப்புகிறார்கள். அதற்கு என்ன அவசியம்? அது சட்ட மீறல் அல்லவா!
முழு பொறுப்பு
காவல் துறையினருக்குத்தானே!
காவல் துறையினருக்குத்தானே!
இங்கே நீதிபதி அய்யா சொன்னதுபோன்று, ஒன்றிய காவல்துறையினருடைய எல்லை எது? நாளை தமிழ்நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருகிறார், பிரதமர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம், எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க, ஒன்றிய அரசிலிருந்தா காவல் துறையினர் வருகிறார்கள் என்பதை தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றிய அரசின் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக வந்தாலும் கூட, மிக முக்கியமாகக் கவலைப்பட வேண்டியவர்கள் தமிழ்நாட்டு காவல் துறையினர்தானே! அவர்களுக்குத்தானே முழுப் பொறுப்பு இருக்கிறது
முன்பு ஒருமுறை பஞ்சாபிற்குப் பிரதமர் மோடி அவர்கள் சென்றிருந்தபோது, வழி மாறிப் போய்விட்ட பிரச்சினை ஏற்பட்டது. வேறு வழி சொல்லிவிட்டார்கள். அதற்காக யார் மேல் நடவடிக்கை எடுத்தார்கள்?
காவல் துறையினுடைய கடமைகளை அவர்கள் செய்யும்போது, அதற்காக அவர்கள் மீது குற்றம் சொல்லுவதா? நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு முதலமைச்சராகவோ, ஓர் அமைச்சராக இருக்கிறவருக்கோ காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். பாதுகாப்பு கொடுத்து முன்னாலே ‘கான்வாய்’ போகும். அப்படிப் போகும்போது, இந்த வழியாக நீங்கள் போகக்கூடாது என்று பாதுகாப்புக்குச் செல்கின்ற காவல்துறையினர் சொன்னால், அதை அவர்கள் ஏற்கவேண்டும், அப்படியில்லாமல், அந்த வழியில்தான் நீங்களும் வரவேண்டும்’’ என்று சொல்வ தற்கு முதலமைச்சருக்குச் சட்டப்படி உரிமை உண்டா என்றால், கிடையாது.
நீதிபதியே சட்டத்தை வளைக்கலாமா? நீதி வளையலாமா?
காவல்துறை போகக்கூடாது என்று சொன்னால், அதை மீறினால், ‘எங்கள் பொறுப்பல்ல’ என்று சொல்வதற்குக் காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டா, இல்லையா? இந்த சாதாரண விஷயம் தெரியாதவர்களா நீதிபதிகள்? தெரியாது என்று நான் சொல்லமாட்டேன். தெரிந்து கொண்டும் நீங்கள் சட்டத்தை வளைக்கலாமா? நீதி வளையலாமா? ஆனால், காவல் துறையினுடைய மரியாதையை – ராணுவத்தைப் பற்றிப் பேசும்போது, தடுக்கலாமா? மதிப்பைக் குறைக்கலாமா? ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; அதேமாதிரி காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே! நம் யாருக்கும் பாதுகாப்பு கிடையாதே!
ஒரு நடிகருடைய பிரச்சினை உள்பட, எந்தப் பிரச்சினை வந்தாலும், முதலில் பாதிக்கப்படுவது காவல்துறையினர்தானே! ஒரு பக்கம் மட்டும் அவர்களுக்கு அடி கிடையாது; இரண்டு பக்கமும் அடி அவர்களுக்கு! இந்தப் பக்கமும் விமர்சனம்; அந்த பக்கமும் விமர்சனம். ஆகவேதான் நண்பர்களே, இன்றைக்கு ‘இம்பீச்மெண்ட்’ என்று கொண்டு வரக்கூடிய அளவிற்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பேர வைத் தலைவரிடமும், குடியரசுத் தலைவரிடமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்குக்காக மட்டுமா? இல்லை.
(தொடரும்)
