நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சுவையான சில செய்திகள்:
அவர் பொருள் எடுத்து அவரையே…
மக்களவையில் பேச எழுந்தார் தி.மு.க. உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி! அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா படாதபாடு பட்டு விட்டார். ‘செல்வ… செல்கம்… செல்… கணபதி’ என்று அவர் சொல்லி முடிக்கவும், அங்கிருந்து தனது பேச்சை தொடங்கினார் திமுக உறுப்பினர். “இதுதான் பிரச்சினை. தலைவர் அவர்களே, இதுதான் பிரச்சினை. என்னுடைய பெயரைச் சொல்வதற்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள் அல்லவா? இன்று எல்லா சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பெயர் கொடுக்கிறீர்கள். அந்தப் பெயரை உச்சரிக்க முடிகிறதா என்று பாருங்கள். சப்கா பிமாம் சப்கி ரக்ஷா என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது ஒரு மசோதா” இன்சூரன்ஸ் திருத்தச் சட்ட மசோதாவைச் சுட்டிக் காட்டி அவர் உரையைத் தொடங்க, அவையில் பலத்த கரவொலி!
சீரியசா காமெடி பண்ணாதீங்க சார்!
lll
படிப்ப மட்டும் பறிச்சுக்க முடியாது…
மக்களவையில் பேசிய கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டோ, தன்னுடைய உரையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ‘அசுரன்’ படத்திலிருந்து,
“உன்கிட்ட சொத்து இருந்தா புடுங்கிக்குவானுக… காடு இருந்தா புடுங்கிக்குவானுங்க…. ஆனா படிப்பை மட்டும் யாராலையும் பறிச்சுக்க முடியாது” என்ற வசனத்தைச் சுட்டிக்காட்டி.உரையாற்றினார். அதனால் தானே தமிழ்நாடு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
