திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் சார்பில், திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது ஆண்டாக டிசம்பர் 14 ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திட்டக்குழுத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், திமுக தகவல் தொழில்நுட்பக் குழு அமைப்பாளர் கோவி.லெனின், சிங்கப்பூர் கார்த்திக் இராமசாமி, மருத்துவர்கள் புரூனோ, சாய்லட்சுமிகாந்த், ராதா, திட்டக்குடி செந்தில்குமார், யூடியூபர்ஸ் இந்திரகுமார் தேரடி, ஜீவசகாப்தன், ராஜா ராஜேந்திரன், விஷ்ணுபுரம் சரவணன், இனியன் ராமமூர்த்தி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (சென்னை, 14.12.2025)
