காற்று மாசு: டில்லி பள்ளிகளுக்கு 10ஆம் தேதிவரை விடுமுறை

Viduthalai
1 Min Read

இந்தியா

புதுடில்லி, நவ.7- டில்லியில் கடந்த சில நாள்களாக வழக் கத்திற்கு அதிகமாக காற்று மாசு பாடு ஏற்படுகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டு மொத்த தரக் குறியீடு (கினிமி) 346 ஆக உள்ளதாகவும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்.கே.புரம் மற்றும் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் (மூன்றாவது முனையம்) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே 438, 491, 486, 473 என்ற அளவில் உள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டில்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகி றார்கள்.

இதன் மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது. தேவையற்ற கட்டட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. மாசுபட்ட காற்றை சுவா சிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், டில்லியில் அதிகரித்துவரும் தொடர் காற்று மாசு காரணமாக அங்கு தொடக் கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. வருகிற 10ஆம் தேதி வரை அனைத்து அரசுப் பள் ளிகளுக்கும் விடுமுறை அளித்து டில்லி அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது. மேலும், 6 முதல் 12ஆ-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை இணைய வழியாக நடத்தவும் உத்தரவிடப் பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *