நீதிமன்றத் தீர்ப்புக்கு தொழில்நுட்பம் துணை நிற்க வேண்டும் – தீர்ப்பு வழங்கக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கட்டாக், டிச. 16- ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘சாமானியருக்கு நீதியை உறுதி செய்தல்: வழக்குச் செலவுகளைக் குறைப்பதற்கான ‘செயல் திட்டம்’ என்ற தலைப்பில் 14.12.2025 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீதித்துறைக்கான தடைகள்: அளவுக்கு அதிகமான வழக்குச் செலவுகளும், வழக்குகளை முடிப்பதற்கு ஆகும் காலதாமதமும் நீதித்துறைக்கும், சாமானிய மக்களுக்கும் இடையேயான இருபெரும் தடைகளாகும்.

வழக்குகள் தேக்கமடைதல்: நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவது, விசாரணை நீதிமன்றம் முதல் அரசியல் சாசன நீதிமன்றம் வரை நீதித்துறையின் ஒவ்வொரு நிலையிலும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துகிறது. மேல்மட்டத்தில் ஏற்படும் முட்டுக் கட்டை, கீழ்மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.

வழக்குகள் தேக்கமடைவதைக் குறைக்க நீதித்துறையின் உள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் இல்லாவிட்டால், நீதித்துறை நிலை குலைந்துபோகும்.

மத்தியஸ்தம் என்பது உண்மை யான சட்டத் தீர்வாக மாறுவதற்கு அதன் மதிப்பை வழக்காடிகள் புரிந்துகொள்ள வேண்டும். பேசி தீர்வு காண்பதைச் சரணடைவதாகக் கருதாமல், அது தீர்வு காண்பதற்கான ஒரு திட்டமிடலாகக் கருதப்பட வேண்டும்.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் அபாயங்கள்

கரோனா காலத்தில் தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனினும், ஒருவரின் உருவம், குரலைப் பயன்படுத்தி போலியான காணொலிகள் உருவாக்கப்படுவது மற்றும் எண்ம (டிஜிட்டல்) முறையில் போலியான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது போன்ற அபாயங்கள் உள்ளன.

இந்த அபாயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, தொழில் நுட்பத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் அபாயங்களைப் போதுமான அளவு கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றங்கள் அதை கண்மூடித்தனமாக நம்ப முடியாது.

தொழில்நுட்பத்தின் நோக்கம்: “ஏழைகள், முதியவர்கள், எண்ம தொழில்நுட்பம் குறித்து தெரியாதவர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படாத சீர்திருத்தம், உண்மையில் சீர்திருத்தம் அல்ல.

இதைக் கருத்தில் கொண்டே, நீதி பரிபாலனத்துக்குத் தொழில்நுட்பம் உதவி செய்ய வேண்டும் என்றும், மனிதத் (நீதிமன்ற) தீர்ப்புக்குத் தொழில்நுட்பம் வலுசேர்க்க வேண்டுமே தவிர, அந்தத் தீர்ப்பைத் தொழில்நுட்பம் வழங்கக் கூடாது என்றும் கூறி வருகிறேன்.” இவ்வாறு தலைமை நீதிபதி சூா்யகாந்த் வலியுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *