‘மூன்று ஆண்டு போர் அழிவிற்குப் பிறகு நேட்டோ கூட்டணியில் இணையமாட்டோம்’ உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெர்லின், டிச. 16- அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சு வார்த் தையில் உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது.

தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022, பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான நான்காண்டு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பெர்லினில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் 14.12.2025 அன்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு ஸெலென்ஸ்கி ஜெர்மனி சென்றடைந்தார்.

அப்போது அவர் போர் நிறுத்தம் ஏற்படுவது குறித்து உக்ரைன் தரப்பு நிலைப்பாட்டைப் பற்றி குறிப்பிடும்போது, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனையும் உறுப்பினராக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி வந்த கோரிக்கையை விலக்கிக்கொள்ள தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், மேற்கத்திய நாடுகளின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உக்ரைன் நிலப்பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த முடிவை முன்பே எடுத்திருந் தால் 3 ஆண்டு போரே தேவையிருந்திருக்காதே?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *