பெங்களூரு, டிச. 16- கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா பெங்களூருவில் நடைபெற்றது. இவ்விழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8.12.2025 அன்று பல்வேறு மாணவர்களுக்கான ‘தமிழோடு விளையாடு’ தமிழ் மொழித் திறன் போட்டியும் பரிசளிப்பும் நடைபெற்றது.
அடுத்து காலை 10.30 மணிக்கு மார்த்தாண்டம் பேபி ஜெபக்குமார் குழுவினரின் ‘அதிசயம் அல்ல, அறிவியல் தந்திரம்’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக தந்தை பெரியார் அவர்களின் ஒளிப்படத்தினை திடீர் என வரவைழைத்து அரங்கத்தில் நிறைந்த அனைவரையும் மகிழ்ச்சி யுற செய்தார். இதே போன்று ஏராளமான நிகழ்வுகளை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சி யுறச் செய்தார்.
தொடர்ந்து 6.00 மணிக்கு சிந்தனைக் களம் நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் சொல்ல மறந்த கதை என்ற தலைப்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அரிய சிறப்புரை ஒன்றரை மணி நேரம் நிகழ்த்தினார். நிகழ்வில் கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன், செயலாளர் இரா.முல்லைக்கோ, மாநில துணைத் தலைவர் பாவலர் சே.குணவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மு.ஜானகிராமன், துணைத் தலைவர் சே. குணவேந்தன் வண்ணமிகு பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தனது உரையில், கருநாடகத்தில் வாழும் தமிழர்கள் மொழி உணர்வு அதிகம் மிக்கவர்கள். உயிர் போனாலும் பரவா யில்லை, தமிழ் மொழியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உயரிய உணர்வோடு இருப் பவர்கள்.
அந்த மக்கள் தமிழ் உணர்வோடு கல்வி உணர்வை உங்களுக்கு விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். எப்படியாவது படித்து விட வேண்டும் என்பது தான் தமிழர்களின் எண்ணம். தமிழர்களின் எல்லா இலக்கியம், இலக்கணம், புதுக்கவிதை உள்பட எல்லாம் சொல்வது தமி ழர்கள் படிக்க வேண்டும் என்பதுதான்.
மலேசிய தமிழர்கள் தமிழ் உணர்வோடு மட்டுமல்லாமல் திராவிட உணர்வோடு இருக்கிறார்கள். அதுதான் மலேசிய தமிழர்களின் சாதனையாக உள்ளது. தமிழுக்குள் தான் திராவிடம், திராவிடத் திற்குள் தான் தமிழ். இது வேறு அது வேறு அல்ல. அதனால் தான் பாரதிதாசன் கவிதைகளை வாசிக்க சொல்கிறோம். வேறு புத்தகங்களை வாசித்தால், அது நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டுவிடும். நாம் எல்லாம் ஒன்றாக இருக்கிறோம். ஒரே போல் இருக்க முடியாது, நாம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஒரே மாதிரி இருக்க தேவையி ல்லை. ஒற்றுமை வேறு ஒரே மாதிரி இருப்பது வேறு.
கீழடியில் தோண் டத் தோண்ட குறியீடு கள், எழுத்துகள், அடையாளம், பொன் பொருள்கள் உள்பட பல கிடத்தன. ஆனால் தோண்டத் தோண்ட மூன்று பொருள்கள் கிடைக்கவில்லை. அது ஜாதி, சாமி, மதம். கீழடியில் கிடைக்கவில்லை. ஒரு வேளை அங்கு ஒரு உருவில் கிடைத்தாலும் அது அனைவருக்கும் பொதுவான சாமியாகத் தான் இருக்கும். அது கறி தின்கிற சாமியாகத்தான் இருக்கும். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார். தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். மான உணர்ச்சி இருந்தால் யாருக்கும் அடிமையாக மாட்டோம். அறிவு இருந்தாலும் யாரையும் அடிமையாக்க மாட்டோம் என்று நெடியவுரையை நிகழ்த்தினார்.
நிறைவாக அமைப்புத் தலைவர் முத்துமணி நன்னன் நன்றி கூறினார். தங்கவயல் கரிகாலன், ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம், இரா.கணேசன், பொதுக் குழு உறுப்பினர் இரா.இராசாரம், செயற் குழு உறுப்பினர் அமுத பாண்டியன், கண்ணியம் இணையர், மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி, வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் அருண், முருகேசன், ஜெயலட்சுமி கஜபதி, அனந்தபுரம் தலைவர் குணசேகரன், மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர். தி.மு.க., வி.சி.க., பகுத்தறிவாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சே.மெ.மதிவ தனிக்கு பயனாடை அணி வித்து சிறப்பு செய்தனர்.
