
ஆஸ்திரேலியாவில், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற கடந்த நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் 13.12.2025 அன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் காணொலியில் பாராட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, எம்.பி. கவிஞர் சல்மா எம்.பி., பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆஸ்திரேலியாவின் தலைவர் அண்ணா.மகிழ்நன், செயலாளர் சுமதி விஜயகுமார், மெல்போன் அரங்க.மூர்த்தி, டாக்டர் ஹாரூண், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, எழுத்தாளர் ‘புதிய குரல்’ ஓவியா, மற்றும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள், மாநாடு சிறக்க பணியாற்றியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினர். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினார்.
