7.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
👉 தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
👉 ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மோடிக்கு ஜவான்களாக பணியாற்றுகின்றனர், கார்கே கடும் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தால் பாஜக மவுனத்தை கலைக்கிறது என்கிறார் கட்டுரையாளர் லிஸ் மேத்யூ.
👉மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து பஞ்சாப் அரசு வழக்கு. ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்.
👉தகவல் தொடர்பு தலைமை ஆணையர் பதவி நியமனம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉 இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் குண்டு வீசப்பட்ட காசா பகுதி “குழந்தைகளின் கல்லறையாக” மாறுகிறது என்று அய்.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை
தி இந்து
👉ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், பாஜக அரசு உத்தரப்பிரதேசத்தில் பசுக்கள் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
தி டெலிகிராப்
👉 ஒடிசா உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக் குரைஞராக ஆஜரானார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
👉பாஜக சார்பில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தேர்தலில் போட்டியிடுவதாக, சத்திஷ்கர் மாநில முதலமைச்சர் பூபேந்திர பாகேல் குற்றச்சாட்டு.
👉 இலங்கையில் நடைபெற்ற மலையக தமிழர்கள் விழாவில் முதலமைச்சருடைய வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பப்படவில்லை. மோடி அரசுக்கு திமுக கண்டனம்.
– குடந்தை கருணா