சென்னை, டிச.15 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீ வில் நடைபெற்ற 7 ஆவது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டில்லி யில் நடைபெற்ற 3 ஆவது CII Sports Business Awards 2025 விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டுத் துறையில் இந்தி யாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7 ஆவது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனா, செல்வி காசிமா, செல்வி மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். செல்வி கீர்த்தனாவிற்கு ஒரு கோடி ரூபாயும், செல்வி காசிமாவுக்கு 50 இலட்சம் ரூபாயும், செல்வி மித்ராவுக்கு 40 இலட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறி விக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செல்வி கீர்த்தனா மற்றும் செல்வி காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலை களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய நாள் வழங்கி, வாழ்த்தி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று, நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனை வர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் உடனி ருந்தனர்.
