திருப்பரங்குன்றம் தீபத் தூண் பிரச்சினை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி
சென்னை, டிச.14– திருப்பரங்குன்றம் விவ காரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தர வுக்கு தடை கோரும் மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ் ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 12.12.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றக் கூறும், அந்தக் கல் அமைப்பு, ஒரு தீபத்தூணா? என்பது அடிப்படைக் கேள்வி. குறைந்தபட்சம், ஏதோ ஒரு கால கட்டத்தில், அங்கு தீபம் ஏற்றியதற்கான, ஏற்கத்தக்க ஆதாரங்கள் சமர்ப்பித்திருந் தால் கூட அதைத் தீபத்தூண் என்று ஏற்றுக்கொள்ள முடி யும். ஆனால், ஒரு துண்டுச் சீட்டு ஆதாரம் கூட, சமர்ப் பிக்கப்படவில்லை. அத்துடன், தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு தாக் கல் செய்யப்பட்ட போது, இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஏற்ெகனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று அரசுத் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், “தீபம் ஏற்றும் இடத்தை ஏன் மாற்றக் கூடாது?” என்று கேள்வி எழுப்பி, வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், விசாரணையின் போது, நீதிபதி கள் எழுப்பிய இந்தக் கேள்வியே பொருத்தமற் றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் அவர்,
“திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், 12.12.2025 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு, ‘நீதிமன்றம் தீபம் ஏற்றும் இடத்தை ஏன் மாற்றக்கூடாது’ என்று கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப் படும் இடத்தை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையே மனுதாரரோ அல்லது நீதிமன்றமோ இதுவரை தெரிவிக்காத நிலை யில், நீதிபதிகள் இத்தகைய கேள்வியைக் கேட்பது பொருத்தமற்றது!” என்று குறிப் பிட்டுள்ளார்.
