கேபினட் அமைச்சர்கள் இல்லாததால் மாநிலங்களவை சற்றுநேரம் ஒத்திவைப்பு! வருத்தம் தெரிவித்தார் கிரண் ரிஜிஜு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இப்படிக் கூடவா?

புதுடில்லி, டிச.14– மாநிலங்கள வையில் கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததால், அவை அலுவல்கள் 12.12.2025 அன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வருத்தம் தெரிவித்தார்.

மாநிலங்களவை 12.12.2025 அன்று கூடியதும் கடந்த 2001, டிச.13-இல் நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், அவை அலுவல்கள் தொடங்கியபோது, கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினா்.

இதையடுத்து, அவையில் கேபினட் அமைச்சரின் இருப்பை உறுதி செய்யுமாறு, இணையமைச்சா் ஒருவரிடம் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அதேநேரம், ‘கேபினட் அமைச்சா் ஒருவா்கூட இல்லாதது, அவைக்கு அவமதிப்பு. அவா்கள் வரும்வரை அவையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

5 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு அவை அலுவல்களை 10 நிமிடங்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியதும் வருத்தம் தெரிவித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மேனாள் மக்களவைத் தலைவரும் மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மறைவையொட்டி, மக்களவையில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. மக்களவையில் தனது பெயரில் குறிக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒன்றிய அமைச்சா் ஜெ.பி.நட்டாவும் அங்கு இருக்க வேண்டியிருந்தது’ என்று விளக்கமளித்தார்.

சிவராஜ் பாட்டீல் மாநிலங் களவை உறுப்பினராகவும் பணியாற்றியவா் என்பதால் இந்த அவையிலும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் திவாரி முன்வைத்த கோரிக்கையை கிரண் ரிஜிஜு ஏற்றுக் கொண்டார். அவை மீண்டும் கூடியபோது ஒன்றிய அமைச்சா்கள் ரிஜிஜு, நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அவையில் இருந்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *