இதுதான் எஸ்.அய்.ஆர். மும்பையில் 2.25 லட்சம் போலி வாக்காளர்கள்; 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டைப் பதிவுகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, டிச.14 நாட்டில் வாக்குத் திருட்டுப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உண்மையான வாக்காளர்கள் நீக்கம், போலி வாக்காளர்கள் மூலம் பாஜக ஒன்றியத்திலும், மாநிலங்க ளிலும் அதிகாரத்தில் நீடித்து வருவதாக ஆதாரங்களுடன் தொ டர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மும்பை மாநகராட்சி யில் 2.25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பெரு நகரங்களில் (மெட்ரோ சிட்டி) ஒன்றான மும்பையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் ஆணையத்தால் (SEC) வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டைப் பதிவுகள் (ஒரே நபருக்கு 2/3 வாக்குகள் – Duplicate/Triplicate Entries) கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் உள்ள மும்பையில், ஏறக்குறைய 10இல் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது. இது வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மை குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பி யுள்ளது. அதிகபட்சமாக மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 4.98 லட்சமும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 3.29 லட்சமும், தீவு நகரத்தில் (Island City) 2.73 லட்சமும் இரட்டை வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக மும்பையில் 11 லட்சம் இரட்டை வாக்காளர் பதிவுகளில், இதுவரை 2.25 லட்சம் வாக்காளர்களின் பதிவுகள் போலியானவை என்றும், ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

இதனால் வாக்காளர் பட்டியல் முழுமையாகச் சரி செய்யப்படும் வரை தேர்தலை நடத்தக் கூடாது என்று மகாராட்டிரா விகாஸ் அகாடி (மகாராட்டிரா மாநில “இந்தியா” கூட்டணி) மற்றும் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *