சிங்கப்பூர் வழிகாட்டுகிறது இந்திய பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மய்யம் உருவாகிறது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிங்கப்பூர், டிச.13- வன்முறையால் பாதிக்கப் படும் பெண்களுக்கு (குடும் பம், சமூகம், பணியிடம் என எங்கு நடந்தாலும்) ஒரே இடத்தில் மருத்து வம், சட்ட உதவி, உள வியல் ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், காவல் துறை உதவி போன்ற ஒருங்கிணைந்த சேவை வழங்கிட ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற சேவை மய்யத்தை நாடு முழுவதும் ஒன்றிய அரசு திறந்து உள்ளது.

இதுபோல் வெளிநாடு களில் உள்ள இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் ஓஎஸ்சி சேவை மய்யங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம் மற்றும் கனடாவில் இந்த சேவை மய்யங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இந் நிலையில் சிங்கப் பூரில் உள்ள இந்தியப் பெண்களுக்கு உதவிட அங்குள்ள இந்தியத் தூதரக வளாகத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ சேவை மய்யம் திறக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இங்குள்ள இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே கூறுகையில், “துன்பத்தில் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இந்த மய்யம் உதவிடும். உடல், பாலியல் அல் லது உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மற்றும் பொருளாதாரச் சுரண்ட லுக்கு ஆளாகும் பெண் களுக்கு அவசர உதவி, தற்காலிகத் தங்குமிடம், சட்டம், மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை இந்த மய்யம் வழங்கும்.

சிறப்புத் தொலைபேசி (+65 8716 5521) மற்றும் மின்னஞ்சல் ([email protected]) மூலம் இந்தியப் பெண்கள் 24 மணி நேரமும் உதவியை நாடலாம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *