27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 13- சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன.

3300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. புழல் ஏரியின் நீர்மட்டம் 21.20 அடி. அது முழுமையாக நிரம்பியிருக்கிறது.

3,231 மில்லியன் கனஅடி கொண்ட பூண்டி ஏரியின் முழு நீர்மட்டம் 35 அடி. இந்த ஏரியும் இன்று முழுமையாக நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1050 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அதுபோல, 3645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, டிசம்பர் 12ஆம் தேதி முழுக் கொள்ளவை எட்டியிருக்கிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. இந்த மூன்று ஏரிகளும் கடந்த 1998ஆம் ஆண்டுதான், ஒரே நாளில் நிரம்பியிருந்தன. அதுபோல சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன.

 

டிஎன்பிஎஸ்சி நடத்திய கல்வி அதிகாரி
தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு

சென்னை, டிச. 13- டிஎன்பிஎஸ்சி நடத்திய மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (12.12.2025) வெளியிடப்பட்டன. முதன்மைத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பதவி அடங்கிய குரூப்-1சி பிரிவில் முதல்கட்டமான முதல்நிலைத் தேர்வு கடந்த 2024 ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் (மெயின்) தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் (பொதுப் பிரிவு மற்றும் பணியில் உள்ள ஆசிரியர் பிரிவு) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு 2026 மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடைபெறும். அந்த தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்கள், தேர்வுக் கட்டணம் ரூ.200-அய் டிசம்பர் 15 முதல் 19ஆம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம். முதல்நிலைத் தேர்வு தேர்ச்சி குறித்து தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக மட்டுமே தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *