அரியலூர், டிச. 12- அரியலூரில் 7.12.25 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஜெயங்கொண்டம் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி ஆர்.ரேஷ்மி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கமும் சான்றி தழும் பெற்றார்.
அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் கே.துவாரகேஷ் இரண் டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் பெற்றார்.
மாணவர்கள் தங்கள் திறமை, கட்டுப்பாடு மற்றும் உறுதியான முயற்சி யின் மூலம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களின் வெற்றிக்கு பயிற்சியாளர் வினோத் விழிப்பு ணர்வான பயிற்சியும், பள்ளி நிர்வாகத்தின் தொடர்ந்த ஊக்கமும் முக்கிய காரணங்களாகும். இந்த சாதனை மாணவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப் படுத்துவதோடு மட்டுமல்லாது, எதிர்காலப் போட்டிகளில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய ஊக்கமாக இருக்கும்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் .
