ஜெயங்கொண்டம், டிச. 12- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6.12.2025 அன்று Talent Show மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடம் மறைந்திருக்கும் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மதியம் 2 மணி அளவில் முதல்வர் ஆர்.கீதா தலைமையில் மொழி வாழ்த்துடன் இவ்விழா இனிதே தொடங்கியது.
நிகழ்ச்சியில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பாடல், நடனம், பரதநாட்டியம், நாடகம், யோகா, அபாகஸ், சிலம்பம், கராத்தே பெரியாரின் பெண் சிந்தனைகள், ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி போன்ற தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர்.
திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் மொத்த சொற்கள், மொத்த எழுத்துகள், மலர்கள், பழம் என திருக்குறளில் உள்ள சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
மாணவர்களின் நம்பிக்கையையும் மேடைத் திறனையும் மேம்படுத்தும் விதமாக இந்த Talent Show சிறப்பாக அமைந்தது. மாணவர்களின் திறமைகளையும், பள்ளியின் சிறப்புகளையும், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மிகவும் அழகாக எடுத்துரைத்தனர்.
நிகழ்வை வெற்றிகர மாக நடைபெற முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் இணைந்து பங்காற்றினர். முடிவில் நன்றி உரையுடன் Talent Show நிறைவடைந்தது,
