திருச்சி, டிச. 12- தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி,புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சிறப்பான வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
17 வயதிற்கு உட்பட் டோருக்கான, 70 கிலோ எடைப் பிரிவில் சிலம்பப் போட்டியில், பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி.எம்.சாஷினி மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி ஜி.த்ரிஷ்ணா வருவாய் மண்டல அளவில் முதலிடத்தோடு, தங்கப் பதக்கமும், , சதுரங்கப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி வி.ச கானா மூன்றாம் இடத் தோடு வெண்கலப் பதக்க மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இம்மாணவிகளையும், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சவுமியா மற்றும் என்.கோகுல் ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
