டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்த விவாதத்தில், மக்களவை அமளி; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
* எனது எந்தக் கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தங்கள் வாக்குரிமை நீக்கப்பட்டால், மேற்குவங்க பெண்கள் போராடுவார்கள், மம்தா எச்சரிக்கை.
* போலீஸ் போல செயல்பட முனையாதீர்கள், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சூடு.
* தெலங்கானா கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 55 சதவீத கிராமப் பதவிகளை கைப்பற்றியது. பாஜக பெற்றது 4.5 சதவீதமே.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கார்த்திகை தீபம் விளக்குக் கம்பம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு தொல்லியல் குழு ஆய்வு செய்கிறது. மலை உச்சியில் திருவிழா விளக்கு ஏற்றுவது தொடர்பான சட்டத் தகராறு மற்றும் சமூக ஊடக விவாதம் தீவிரமடைந்துள்ளதால் ஏழு பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது
தி டெலிகிராப்:
* பொய் அம்பலம்: பாபர் மசூதிக்கு நேரு ஒருபோதும் பொது நிதியை நாடவில்லை என்பதை நிரூபித்தார் ஜெய்ராம் ரமேஷ்: ராஜ்நாத் சிங்கிடம் படேல் மகளின் நாட் (டைரி) குறிப்பை நேரில் வழங்கினார். முன்னதாக பாபர் மசூதிக்கு நேரு பொது நிதியை நாடினார், படேல் அதை எதிர்த்தார் என ராஜ்நாத் சிங் பேசினார்.
– குடந்தை கருணா
