மதுரை, டிச. 12- 22-11-2025 அன்று மாலை 6மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் திராவிடர் கழக வழக்கு ரைஞரணி கூட்டமும் பொறியாளர் இரா.வாழவந்தான் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் தலைமையேற்றுஉரையாற்றினார்.
வருகை தந்த அனைவரையும் மதுரை வழக்குரைஞர் க.பொன்னையா வரவேற்று உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா, மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், முனைவர் வா.நேரு, மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் நோக்கத்தையும் இரா.வாழவந்தான் பாராட்டப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
முன்னிலை ஏற்ற வழக்குரைஞர்கள் எஸ்.தியாகராஜன், பி.கனகராஜ், திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர், இராம.வைரமுத்து இரத்தினச் சுருக்கமாக தன்கருத்துக்களைஎடுத்துக்கூறினார்.
விழாவில் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கத்தின் இணைஇயக்குனரும் பணிநிறைவு பெற்ற பொறியாளர் இரா.வாழவந்தானுக்கு துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சால்வை அணிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார்.
வழக்குரைஞரணி மாநில செய லாளர் மு.சித்தார்த்தன்.மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன், தே.எடிசன்ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து பாராட்டு நினைவுப் பரிசை பலத்த கைதட்டலுடன் வழங்கினர். பாவலர்சுப.முருகானந்தம், இரா.வாழவந்தான்அவர்களை தன் கவிதை வரிகளால் பாராட்டிப் பாடியது சிறப்பான செய்தி.
அவர் பாராட்டப்பட வேண்டிய அவசியம் குறித்து இரா.வாழவந்தான் அவர்களின் நெருங்கிய நண்பரும் வழக்குரைஞரணி மாநில துணை செய லாளருமான வழக்குரைஞர் நா.கணேசன் சற்று விரிவாக எடுத்துச் சொன்னார்.
நன்றியுரையாற்றிய சுசீலா வேல்முருகன், மதிவதனியின் அறிவுக் கூர்மையை பாராட்டியும், பொறியாளர் வாழவந்தான் அவர்களுடைய பணிக்காக நன்றி சொல்லியும் நிறைவு செய்தார்.
