‘‘நீதிமன்ற அவமதிப்பு’’ ஓர் ஆயுதம் அல்ல நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.12 திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் சமீபத்திய தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பெரும் மத மற்றும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்தது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. இதில் பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டனர். மோதல்களைத் தொடர்ந்து, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலைத் தமிழ்நாடு காண்பது அரிது.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான பல விவாதங்கள் உருவாகி உள்ளன.

இத்தகைய சூழலில்தான், அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக மிக முக்கியமான உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதன்படி, நீதிபதிகள் அவமதிப்பு வழக்குகளைத் தனிப்பட்ட கவசம் போலப் பயன்படுத்தக் கூடாது என்றும், விமர்சனங்களை அடக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அழுத்தமாகக் கூறி உள்ளது.

நவி மும்பையைச் சேர்ந்த வினிதா சிறீநந்தன் என்பவர், தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, நீதிபதிகளைப் “நாய் மாஃபியா” என்று விமர்சித்தார். நாய்கள் தொடர்பான வழக்கில் நாய்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி இவர் விமர்சனம் செய்திருந்தார்.

தனிப்பட்ட கவசம் அல்ல

மும்பை உயர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறீநந்தன் மன்னிப்புக் கேட்டபோதும், அவரின் மன்னிப்பு உண்மையான வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை என முடிவு செய்த உயர் நீதிமன்றம், அதை ஏற்க மறுத்து ரூ.2,000 அபராதத்துடன் ஒரு வாரச் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, வினிதா சிறீநந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்து, அவரின் தண்டனையை நிறுத்தி வைத்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தைக் கவனத்துடன் கையாள வேண்டும் என வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், இந்த அதிகாரம் நீதிபதிகளின் தனிப்பட்ட கவசம் அல்ல, விமர்சனங்களை அமைதிப்படுத்தும் ஆயுதம் அல்ல என்று குறிப்பிட்டது. அதாவது, நீதிமன்ற அவமதிப்பு என்பதை அஸ்திரம் போல நீதிபதிகள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

“கருணை என்பது நீதித்துறை மனசாட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்தவர் தனது தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்கும்போது, அதை ஏற்றுக்கொண்டு கருணை வழங்கப்பட வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 1971 இந்திய நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், பிரிவு 12 ஆனது, தண்டனை விதிக்கும் அதிகாரத்தை மட்டுமல்லாது, அதை நீக்கும் அல்லது குறைக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் உறுதிப்படுத்துவதாக நீதிபதிகள் விளக்கினர். அதாவது, ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் கூட அதை நீக்கவோ, குறைக்கவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் சிறீநந்தனுக்கு மன்னிப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அவமதிப்பு வழக்கை ஒரு ஆயுதம் போலப் பயன்படுத்தியது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *