கன்னியாகுமரி, டிச. 11- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் எழுச்சிகரமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய தொண்டுகள், சமூகநீதியை நிலைநாட்ட அவர் நடத்திய போராட்டங்கள், தியாகங்களை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
காப்பாளர் ம.தயாளன், கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் தோவாளை ஒன்றிய செயலாளர் மா.ஆறுமுகம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.குமார தாஸ், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, ம.செல்வராசு, கார்மல், பெனடிக்ட் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்
