விமான சேவை ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இண்டிகோ, ஒன்றிய அரசை கடிந்து கொண்ட டில்லி உயர்நீதிமன்றம்

புதுடில்லி, டிச.11– இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதத்தால் ஏற்படும் குழப்பத்தைத் தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டில்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. விமானிகளுக்கான புதிய பணி முறை விதிகளால், இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து பெரும் சிக்கலுக்கு ஆளானது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பிரச்சனைகள் முழுமையாக சரி செய்யப்படாவிட்டாலும் மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி அந்த நிறுவனம் திரும்பி வருகிறது.

விமான சேவை ரத்து

இந்த நிலையில், இண்டிகோ விமானங்கள் திடீரென்று ரத்தானது மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி டி.கே. உபாத்யாயா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், ‘‘இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதத்தால் ஏற்படும் குழப்பத்தைத் தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் முடங்கியது கவலை அளிக்கிறது. திடீரென ஒரு நெருக்கடி ஏற்படும்போது பிற விமான நிறுவனங்கள் எப்படி விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை டிக்கெட் கட்டணம் வசூலித்து லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டன?. இத்தகைய நிலைமை மோசமானது” என தெரிவித்தது.

இதையடுத்து ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, ‘‘இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘‘இந்த நடவடிக்கைகள் பிரச்சினை வந்த பிறகு தான் எடுக்கப்பட்டன. முதலில் இந்தப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது?, விமான நிலையங்களில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்கு நரகம்) மற்றும் இண்டிகோ விரை வாக இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *